ஒரே நாடு; ஒரே தேர்தல்

(எம். காசிநாதன்)
இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் முதலாவது நிகழ்ச்சி நிரல், இந்தியாவில் “ஒரே நாடு; ஒரே தேர்தல்” என்ற கோட்பாட்டுக்கு, முழு வடிவம் கொடுப்பதுதான். முதலாவது அனைத்துக் கட்சிகளின் கூட்டம், நாடாளுமன்றத்தைச் சுமூகமாக நடத்துவதற்குக் கூட்டப்பட்டது. அடுத்ததாக, நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்காக, 19.6.2019 அன்று, இரண்டாவது அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.