கந்தன் கருணை படுகொலை

இதன் போது மொத்தம் 53 தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலையிற்குள் கொல்லப்பட்டனர. இதில் ஒரு சிறுபகுதியினர் இந்த சிறைப்படுகொலையில் இருந்து உயிர் தப்பினர். அவர்களின் வாக்கு மூலங்களே இன்று ஆதார ஆவணங்களாகி நிற்கின்றன. சிறைக்கைதியாக இருந்து உயிர் தப்பிய ஜெயக் கொடியின் ஆவணம் ஒன்று இங்கு ஆதார ஆவணமாக உருவாகியுள்ளது.தமிழ் சூழலில் கந்தன்கருணைப் படுகொலையும் தமிழ் மக்கள் மத்தியில் நிலவிய தமிழர் தரப்புப் பாசிச செயற்பாட்டின் அடையாளமாக காட்டி நிற்கும் மாற்றுக் கருத்தாளர் மீதான கொலைவெறியைக் காட்டி நிற்கும் கொலை வெறியாட்டமாகும்.இது தமிழீழ விடுதலைப் புலிகளின் முகத்தை குறியீட்டு ரீதியில் உலகிற்கு எடுத்தியம்பி நிற்கும் ஒரு வரலாற்று நிகழ்வு. இது 1987 மார்ச் 29 அன்று பின் இரவில் நடைபெற்று மார்ச் 30 ம் திகதியே மக்களால் அறியப்பட்டதாகும். இதன் போது மொத்தம் 60 பேர் வரையிலான தமிழ் அரசியல் கைதிகள் புலிகளின் சிறைச்சாலையிற்குள் கொல்லப்பட்டனர். இதில் நால்வர் மாத்திரம் சடலங்களுடன் இறந்தவர்கள் போல் இருந்து தப்பி வந்தனர். அவர்களின் வாக்கு மூலங்களே இன்று ஆதார ஆவணங்களாகி நிற்கின்றன. இதில் தைரி என்பவரின் பெயரில் வெளிவந்த பதிவுகளும் கல்முனை ஹென்றியின் வாக்கு மூலமும் ஆதார ஆவணங்களாகி இருக்கின்றன.இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் பஞ்சாப் அமிர்தசரஸின் ஜலியான்வாலா பாக் மைதானத்தில் நடைபெற்ற படுகொலை பிரித்தானிய இராணுவத்தின் கொலை பிரிதானிய ஆளும் வர்க்கத்தின் காலனியாதிக்க நாடுகள் மீதான மேலாதிகத்தின் வெளிப்பாட்டை இயல்பை எடுத்துக் காட்டியகொலை. இங்கு இந்த படுகொலையில் தப்பியவர்களின் வாக்கு மூலங்கள் இன்று ஆதார ஆவணங்களாகி நிற்கின்றன. இந்தப் படுகொலைச் சம்பவம் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 நடைபெற்றது. பிரித்தானிய அரச மதிப்பீட்டின் படி மொத்தம் 379 பேர் இந்நிகழ்வில் இறந்தனர். ஆனாலும் தனியார்களின் தகவல்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஹிட்லர் யூதர்களை அறைகளுக்கு அடைத்து நஞ்சூட்டி கொலை செய்தது நாஸிச செயற்பாடுகளை அடையாளப்படுத்திய கொலை. ஹில்லர் ஜேர்மனிய தேசியத்தை முன்னிறுத்தியே தனக்கான ஆதரவுத் தளத்தை விரிபுபடுத்தியே இந்த கொலைகளை செய்தான். இங்கு ஹில்டலரின் இடதுசாரிகளுக்கு எதிரான நாஜிச செயற்பாடுகளே மேலொங்கி நின்றன.1941 இலிருந்து 1945 வரை, யூதர்கள் ஒரு இனப்படுகொலை மூலம் திட்டமிட்டு 6 மில்லியன் வரை கொலை செய்யப்பட்டனர். யூதர்கள் தவிர வேறும் பிற இனத்தவர்களும், பிரிவினரும் கூடப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களுள், ஜிப்சிகள், சோவியத் ஒன்றியத்தவர் மற்றும் சோவியத் போர் கைதிகள், பொதுவுடமைவாதிகள், போல் இனத்தவர், பிற சிலாவிய மக்கள், ஊனமுற்றோர், தன்னினச் சேர்க்கையாளர், அரசியல் எதிரிகள், மாறுபட்ட சமயக்கருத்துக் கொண்டவர்கள், யூஹோவா சாட்சியாளர் என்போரும் அடங்குவர். பல அறிஞர்கள் பெரும் இன அழிப்பு என்னும் போது மேற்படி எல்லாப் பிரிவினரையும் சேர்த்துக் கொள்ளாமல் யூதர்களின் படுகொலையை மட்டுமே குறிப்பர். ஜேர்மன் அரசு இதனை “யூதர் பிரச்சினைக்கான இறுதித் தீர்வு” என வர்ணித்தது. நாஸி ஜேர்மனியில் இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட எல்லாப் பிரிவினரதும் மொத்தத் தொகை 9 தொடக்கம் 11 மில்லியன் வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.சோவியத்துகளின் மனித குலத்தை காப்பாற்றுவதற்கான அர்பணிப்பு நிறைந்து போராட்டம் ஹிட்லரின் நாஸிசத்தை வேரறுத்து இன்று அவனை உலகில் அம்பலப்படுத்தியதில் முன்னிலை வகிக்கின்றது இதற்கு அப்பால் ஐரோப்பா முழுவதும் செயற்பட்ட இடதுசாரிகளின் அர்பணிப்புகள் அளப்பரியனவாகவும் அமைந்தன. இதற்கான ஆவணப் பதிவாக நாம் ஜூலிஸ் பூசிக் இன் ‘தூக்கு மேடைக் குறிப்பு” புத்தகத்தை பார்க்கின்றோம். இந்த கொலைகளை எந்த நபர் செய்தார் என்பதற்கு அப்பால் எந்த அமைப்பு, எந்த நாடு, எந்த தலமைத்துவம் செய்தது என்பதே பிரதானமாகி இருக்கின்றன. சிறப்பாக எந்த சிந்தனையின் கொள்கையின் அடிப்படையில் நடைபெற்றன என்பதே முக்கியத்துவம் பெறுகின்றது இன்னும் சொன்னப் போனால் எந்த சிந்தாத்தத்தின் அடிப்படையில் இவை நடைபெற்றன என்பதே இங்க முக்கியமாகின்றது.இந்த கொலைகளுக்கான மனித அழிப்புகளுக்கான சித்தாத்தங்கள் எவை என்பதை நாம் கண்டு பிடித்து அதனை எதிர் கொண்டு அவற்றை இல்லாமல் செய்வதற்கான போராட்டங்களே மனிதகுல மீட்சிக்கான நிரந்தரத் தீரவை தரும். இவ்வாறு செயற்படுவதன் மூலமே நாம் இது போன்ற மனித குல வரவாற்றில் நடைபெற்ற மிக மோசமான மனித உரிமை மீறல்கள் பாசிசங்கள் நாஜிசங்கள் காலனியத்திகத்தை ஒழிக்க முடியும்.மாறாக இதனை செயற்படுத்திய தலைவர்கள், நபர்கள், தளபதிகள் அல்லது இயக்க உறுப்பினர்களை தேடி அலைவதும் அவர்களுக்கான தண்டனை வழங்குவதும் எதிர்காலத்தில் இதே சித்தாத்தங்களை தமக்குள் கொண்டு செயற்பாடுடைய இன்னொரு துப்பாக்கி இவற்றை செய்வதற்கே வாய்ப்புகள் தொடர்வதற்கே வழிவிட்டதாக அமையும்.மாறாக இந்த விடயங்களில் நேரடியாக பாதிக்கப்படவர்களின் உணர்சிக் கொந்தளிப்பு பிரித்தனியாவரை தேடி சென்று ஜலியான்வாலா கொலைகளை செய்த இராணுவத் தளபதியை கொலை செய்துதும் செய்ய முயலுவதும் அதற்காக முழுமைமையான தீர்வைப் பெற்றுத்தராது.வேணும் என்றால் இதில் ஈடுபட்டவர்களை மக்கள் மன்றில் நிறுத்தி அம்பலப்படுத்துவதற்குரிய வேலைகளை செய்வது நீதியின் பால் மக்களுக்கான நம்பிக்கைகளை..? ஏற்படுத்த உதவலாம்.அதற்கு நாம் செலவழிக்கு உழைப்பு பாரிய பலன்களை இந்த மனித குலத்திற்கு அதிகம் பெற்றுத் தராது அந்த வகையில் கந்தனை கருணை படுகொலையை நாம் அணுகி தமிழ் சூழலில் இது போன்ற விடயங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வோம். அது எத்தரப்பில் இருந்து வந்தாலும்.கந்தன் கருணைப் படுகொலையை விட மிக அதிகமான மாற்றுக் கருத்தாளர்கள் உண்மையில் துணுக்காய் முகாமில் அடைத்து வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதே அதிகம் இதில் 4000 வரையிலான தமிழ் மாற்றுக் கருத்தாளர்கள் அடைத்து வைக்கப்பட்டு சில நூறு பேரைத் தவிர ஏனையவர்கள் முழுவதுமாக கொல்லப்பட்டதே வரலாறு. இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்கால் படுகொலையிற்கு முன்பு இலங்கை அரசால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையைவிட தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகம் என்ற கசப்பான உண்மையை நாம் ஜீரணித்துதான் ஆக வேண்டும். இந்த வதை முகாமில் இருந்து தப்பிய சமரன் என்பவர் இதற்கான ஆதார ஆவணமாக ‘ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்” புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார்.ஆனாலும் வரலாற்றில் சில நிகழ்வுகளே குறியீட்டு அடையாளமாக பேசப்படுவது வழக்கம் அந்த வகையில் கந்தன் கருணை படுகொலை தமிழ் சூழலில் தமிழர்களாலேயே மாற்றுக் கருத்தை கொண்டு இருந்தார்கள் என்பதற்காக அவர்களது குரல் வளையை நசுக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட தமிழ்ச் சிறைப் படுகொலையாகும்.மாற்றுக்கருத்தாளர்கள் எனைய போராளிக் குழுகளின் போராடும் உரிமைகளை மறுக்கும் சிந்தனையின் வெளிப்பாட்டால் உருவான ஏக போக சிந்தனையும் அதன் வளர்சிப் போக்கில் உருவாகி வந்த பாசிச செயற்பாடுமே இதற்கான காரணம். எனவே இதனை தமிழ் சூழலிலும் ஏனைய மனித செயற்பாடுகளிலும் இது போன்ற சிந்தனையை சித்தாங்களை கொள்கைகளை இல்லாமல் செய்வதற்கான போராட்டமே இதற்கான நிரந்தரத்; தீர்வை பெற்றுத் தரும்.ஜேர்மன் தேசியம் என்ற குறும் தேசியத்தின் வெளிப்பாடு நாஸிசமாக வளர்ச்சியடைந்து யூத இனத்தையும் இடதுசாரி கருத்தாளர்களையும் வகைதொகையில்லாமல் அழித்தொழித்த செயற்பாடு வளர்ச்சியடைந்து. இதற்கு ஹில்லர் பாவித்த ‘ஜேர்மன் தேசியம்” என்ற சொல்லாடல் பேருதவியாக இருந்தது.அதன் பால் ஈர்க்கப்பட்ட ஜேர்மனியரின் அன்றைய ஆதரவு ஹில்டலரின் இந்த கொலைச் செய்பாடுகளுக்கு வழிவகுத்தன. இன்று மனித குலத்திடம் இருந்து நாம் அவ்வாறு செயற்படவில்லை….. ஹிட்லருக்கும் எமக்கும் எந்த உறவும் இருக்கவில்லை என்று உலகெங்கும் ஓடி ஒழியும் நிலைப்பாடுகள் நடைபெறுவதை அவதானிக்க முடியும்.உலகம் முழுவதையும் தனது காலனி ஆதிகத்தின் கீழ் கொண்டு வந்து சுரண்டலை தொடர்ந்து மேற்கொள்ளும் முதலாளித்து சிந்தனையில் இருந்து உருவானது காலனியாதிக் சிந்தனையின் வெளிப்பாடு பிரித்தானியாவின் இந்தியாவின் ஜலியான்வாலாவின் திறந்த வெளி மைதானத்தில் நடைபெற்ற கொலையிற்கான காரணமாக அமைந்தது. தமது காலனி ஆதிக்கத்தை கேள்விக்குள் உள்ளாக்கிய அப்பாவி மக்கள் அன்று வகை தொகையின்றி கொல்லப்பட்டனர்.காலனி ஆதிக்க சிந்தனையின் கொள்கையின் சித்தாந்தத்தின் முதுகெடும்பை உடைப்பே இது போன்ற செயற்பாடுகள் எதிர்காலத்தில் நடைபெறாறமல் தடுப்பதற்கான போராட்டமாக இருக்க முடியும். இன்று அது நவ காலனி ஆதிக்கமாக உலகில் பல நாடுகளினால் குறிப்பாக பிரித்தானியா, அமெரிக்காவினால் மேற்கொள்ளபடுவதை நாம் காண முடியும் இதன வடிவங்களே தமது பொம்மை அரசுகளை வேறு நாடுகளில் நிறுவ முயலும் இன்றைய செயற்பாடுகள் ஆகும்.ஒரு நாட்டிற்குள் வாழும் பல்தேசிய இனங்களுடன் உரிமைகளை சமமாக பகிர்ந்து வாழ தயாரற்ற பேரினவாதத் சிந்தனையின் வெளிப்பாடாக சிறுபான்மை மக்களை முழுவதுமாக அழத்தொழிக்க முற்படும் ஒரு செயற்பாட்டின் வடிவமாக உருவானதே சிங்கள் பௌத்த பேரினவாதம் வெலிக்கடைப் படுகொலையை விட மிக அதிக அளவில் ஆயிரம் ஆயிரம் மக்களை கொன்று குறித்து முள்ளிவாய்கால் செயற்பாடு அமைந்திருப்பதை நாம் யாவரும் அறிவோம்.இங்கும் வெலிக்கடை சிறைப் படுகொலை கறுப்பு ஜுலையாக 1983 இல் இருந்து இன்றுவரை பேசப்படும் ஒரு குறியீட்டு அவலமாக இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.இவற்றின் அடிப்படையிலே நாம் இந்த மனித குலத்திற்கு எதிரான அடையாளமாகி இருக்கின்ற கொலைகள் மனித அழிப்புகளை பார்க்க முடியும். இதற்கு அப்பால் இந்த நான்கு சம்பவங்களுக்கும் அப்பால் பல தேசங்களில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் கொலைகள் நடைபெற்று இருக்கின்றன அவைகளும் பேசப்பட வேண்டும்… பேசப்பட்டும் இருக்கின்றன. கூடவே உலகம் முழுவதும் ஏற்கனவேயும் தற்போது இது போன்ற பல விடயங்கள் நடைபெற்றிருக்கின்றன…. நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன இவ் செயற்பாடுகளுக்கெதிரான குரல்கள் உயர்த்தப்பட வேண்டும். இவற்றையும் நாம் தடுத்து நிறுத்துவதற்காக இணைந்து சமூகமாக போரிடல் என்பதே கந்தன் கருணைப் படுகொலையை நாம் தொடர்தாற் போல் நினைவு கூர்வது செயற்படுவது என்று புறப்பட்ட இவ்வேளையில் பலமானதாகவும் சரியானதாக இருக்க முடியும்.