கன்னியா: அடிபணியவைத்து அபகரிக்கப்படுகிறதா?

(இலட்சுமணன்)

திருகோணமலை, கன்னியாவில் பிள்ளையார் கோவிலை ஆக்கிரமிக்க முற்படும் பௌத்த பேரினவாதத்துக்கு எதிராகத் தமிழர்கள் பெருந்திரளாக நேற்று முன்தினம் (16) அணிதிரண்டிருந்தனர். பாதுகாப்புத் தொகுதியினரின் பல்வேறு கெடுபிடிகள், சூழ்ச்சிகள் மற்றும் நீதிமன்றத் தடை உத்தரவுக்கு மத்தியில், இனமத வேறுபாடுகள் கடந்து, தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டிருந்தமை புறமொதுக்கி விடக்கூடிய செய்தி அல்ல!