கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்த தலைவர்

கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்த தலைவர்களிடையே
தியாகம் செய்ததில்
பெரும் போட்டியே இருந்திருக்கிறது!

இந்திரஜித் குப்தாவின் பரம்பரையே
ICS / IAS பரம்பரை !
மன்னர்கள் , ஜமீன்தார்களின் தலைமை அதிகாரிகளாக இருந்து ஆட்சியதிகாரத்தில் பெரும் பதவிகளை அனுபவித்தவர்கள்!

1932 இல் இந்திரஜித் குப்தா லண்டனுக்கு
கலெக்டர் வேலைக்கு படிக்கப் போனபோது
தந்தை இந்தியாவின் டைரக்டர் ஜெனரல் ஆப் அக்கவுன்ட்ஸ்!

பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ரஜனி பாமி தத் தொடர்பால் கம்யூனிஸ்டாக மாறினார் !

1939 இல் நாடு திரும்பி கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்ததும் அவருக்கு கட்சி கொடுத்த முதல் வேலை…
தலைமறைவாக இருந்தத் தலைவர்களுக்கு
ரகசியமாக கடிதங்கள் – புத்தகங்களை எடுத்துச் செல்வதுதான்!

இந்திய நாடாளுமன்றத்தில் 37ஆண்டுகள்
MP- யாக இருந்தவர் இவர் ஒருவரே !
( 1960 — 1977 & 1980 — 2001)

வருகிற 18.3.2018 ஆம் நாள்
இந்திரஜித் குப்தாவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா தொடங்குகிறது….

___________________________________________________

கோவை வழக்கறிஞர்
கே.சுப்பிரமணியன் பதிவிலிருந்து.

(Rathan Chandrasekar)