கலைந்த வேசமும் களைத்த தேசமும்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடனான சந்திப்பின்போது, “ஒளிவு மறைவு இல்லாது மக்களுக்கு அறிவியுங்கள்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்து உள்ளார். ஐ.தே.க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக முன்வைக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில், வடக்கு – கிழக்குத் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு என்ன என்பதை, நாட்டு மக்கள் மத்தியில், ஐ.தே.க வௌிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பதே, சம்பந்தனின் மேற்குறிப்பிட்ட கோரிக்கையே யாகும்.இதையே, இன்று தமிழ் மக்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.