களத்தில் குதித்துள்ள பொருளாதார அடியாட்கள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையர்களின் கதையாடல்கள், இப்போது வேறு தளத்தை நோக்கி நகர்ந்துள்ளன. இன்னும் சரியாகச் சொல்வதானால் நகர்த்தப்பட்டுள்ளன.  நேற்றுவரை போராட்டத்துக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஆதரவாக இருந்தவர்கள், கருத்துரைத்தவர்கள் பலர் இன்று அரசாங்கத்துடன் ஐக்கியமாகி, பதவிகளைப் பெற்றுள்ளார்கள். அவர்கள், போராட்டத்துக்கும் போராட்டக்காரர்களுக்கும் எதிராக, இன்று கருத்துரைக்கிறார்கள்; அவ்வாறான கருத்துருவாக்கம் ஒன்றைச் செய்கிறார்கள்.