காணாமல் ஆக்கப்பட்டோர்…..

சர்வதேச சக்திகள் இதற்கான ஆதரவை வழங்கியிருக்கும். கோரிக்கைகளுடன் ஆர்ப்பாட்டப்ப் பேரணிகளில் பங்கு கொள்ளும் மக்கள் வசதி படைத்தவர்கள் அல்ல. அவர்களின் கோலம் எவரையும் கண்கலங்க வைப்பது. பொருளாதார ரீதியாக அவர்கள் இந்தப் பத்தாண்டுகளில் எவ்வளவோ மேல்நிலை அடைந்திருக்க லாம் .
ஆனால் தமிழ் தலைமைகள் அவர்கள் கையறு நிலையை தமக்கான ஆதாயமாக கருதினார்களே அல்லாமல் அவர்கள் கண்ணீர் துடைக்க முன்வரவில்லை.

போகாத ஊருக்கு வழி சொல்லும் அரசியல்தீர்வு ஏமாற்று வித்தை கோரிக்கைகளை ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் முன்வைத்து தாம் தப்பிக்கொண்ட தோடு அவர்கள் பிரச்சனை முடிந்துவிடும்.
அண்மையில் யாழ் நகரில் காணாமற் போனார் பணிமனை தொடங்குவதற்கு இருந்த எதிர்ப்பு இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
தோழர் வரதராஜப் பெருமாள் கூற்று இந்த போராட்டத்தில் பங்குகொண்ட எல்லோருக்கும் மிகவும் இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று. . ஆம்! அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பது எவ்வளவு நிதர்சனமான கூற்று.

யதார்த்தத்தை புரிந்து இழந்துபோன மக்களுக்கான இழப்பீடுகள் களில் கவனம் செலுத்துவதற்கு பதில் அயோக்கியத்தனம் கயமை,ஏமாற்று இவற்றை கொண்டே எப்போதும் அரசியல் செய்யலாம் என எவரும் கருதினால் பாவம் அந்த பாதிக்கப்பட்ட மக்கள்.