காணாமல் போனவர்களின் கண்ணீர்

1
ஒலி பெருக்கிமூலம் தன் இனத்தை தன்னிடமே சரணடையுமாறு அறிவித்து,
அதை நம்பி தாய், தகப்பன் கொண்டு சென்று ஒப்படைத்து,
இன்றுவரை கிடைக்காத பிள்ளைகளுக்கு யாராவது தீர்வு பெற்றுத் தருவீர்களா !?

2
வலுக்கட்டாயமாகத்தான் பிடித்துச் சென்றார்கள்,
எனது பிள்ளைக்கும் அவர்களுக்கும் சம்மந்தம் இல்லை,
என்று கூறி கண்ணிருடன் ஒப்படைத்து, இன்று வரை கிடைக்காத தாயின் பிள்ளைக்கு யாராவது தீர்வு பெற்றுத் தருவீர்களா ?!

3
புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில்,
A9 பாதையூடாக பயணித்தவர்களை, புலிகளின் கட்டுப்பாட்டில் இறக்கி, விசாரித்துவிட்டு விடுகிறோம்,
என்று சொல்லிக் கொண்டு சென்ற கணவன்மார்களை,
இன்றுவரை தேடிக் கொண்டிருக்கும் மனைவிமாருக்கு யாராவது தீர்வு பெற்றுத் தருவீர்களா !?

4
கட்டாயப் பயிற்சி எடுக்காமலும், எல்லைப் படையில் இணையாமலும், திருமணம் முடித்த கணவனை,
ஊர் பார்க்க இழுத்துச் சென்று மாங்கல்யத்தையும் பறி கொடுத்து,
இன்றுவரை வாழ்கையை தொலைத்து அபலையாக நிற்கும் விதவைக்கு யாராவது தீர்வு பெற்றுத் தருவீர்களா !?

5
கட்டாயப் பயிற்சி எடுக்காவிடில் பரிட்சைகூட எழுத முடியாது என்று கூறி, பயிற்சிக்காக கொண்டு சென்று, இன்றுவரை வீடு திரும்பாத பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோருக்கு, யாராவது தீர்வு பெற்றுத் தருவீர்களா !?

6
குறுக்குக் கட்டுடன் குளித்துக் கொண்டிருந்த பெண்களை,
குமரிப் பெண்களென்றும் பாராமல் புலித் தேவனால் குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்ற பெண்களைக் காணாமல் தவிக்கும் பெற்றேருக்கு யாராவது தீர்வு பெற்றுத் தருவீர்களா !?

இனப் படுகொலை. அதுவும் அவ்வாறே!!

இதில் எந்த இன அழிப்புக்கு, யாரால் ஏற்பட் இன அழிப்புக்கு, தீர்வு காண வேண்டும்.

1
புலிகளின் இலக்கை நோட்டமிட்டு வட்டமடித்துக் கொண்டிருந்த புக்காரா விமானத்தின் இலக்கை திசை திருப்ப,

ஆயுதம் பொருத்திய பிக்கப் வாகனத்தை மக்கள் அகதிகளாக இருந்த நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்துக்குள் செலுத்த,

குண்டைக் கொண்டு வந்து கொட்டிவிட்டான் புக்காரா !!

அதன் பிறகு.
பிதாவே என் பிதாவே ! ஏன் என்னைக் கை வீட்டீர் என்ற வேத வாசனத்தை ஈனக் குரலில் ஒலிக்கவிட்டு,

புக்காரா நரபலி எடுத்த நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் என்று பிரச்சாரம் செய்த,
இன ஆழிப்பை எந்தப் பட்டியலில் இடுவது.

குண்டு போட்டவனிலா,
குண்டு போடப் பண்ணினவிலா !?

2
மன்னார் மடு மாதா தேவாலயத்தில் அகதிகளாக மக்கள் இருக்கிறார்கள், இங்கிருந்து செல் அடிக்காதீர்கள் என்று பங்குத் தந்தை சொல்லச் சொல்ல,

அதை கொஞ்சங்கூடக் கேட்காமல் அலச்சியம் செய்து,
செல்லடித்துவிட்டு மோட்டாரைக் கொண்டு சென்றுவிட்டார்கள் புலிகள்.

விளைவு என்ன!,,?

எந்த இலக்கில் இருந்து செல் வந்ததோ! அதே இலக்குக்கு நோக்கி இராணுவம் திருப்பி செல் அடிக்க,
அடித்த செல்லில் பலியான மக்களை வைத்து,

மன்னார் மடு மாதா படு கொலை என்று, பிரச்சாரம் செய்த,
இன அழிப்பை எந்தப் பட்டியலில் இடுவது.

கோயிலடியில் இருந்து செல் அடித்தவனிலா !?
அல்லது செல் வந்த இலக்குக்கு திருப்பி அடித்தவனிலா !?

3
செஞ்சோலை வளாகத்துக்குள் கட்டாயமாக பயிற்சிக்கு கொண்டு சென்ற பள்ளி மாணவிகளுக்கு,
பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும் போது,

மூன்று நாட்டகளாக வண்டு விமானம் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது, இவங்கள் வேறு பிள்ளைகளை கொண்டு சென்றுவிட்டான்களே!
என்று பெற்றோருக்கே புரிந்து பதை பதைத்துக் கொண்டிருக்க,

செஞ்சோலை வளாகத்துக்குள் இருந்து, காஸ் பலூனை மேலே பறக்கவிட்டு, வண்டுக்கு படம் காட்டி,
கிபிருக்கு பலிகொடுத்து,

இன்று குத்துக் கல்லாக தாய் தகப்பன் உயிரோடு இருக்கும்போது, இறந்தவர்களை ஆனாதைகளாக்கி,

செஞ் சோலைத் தாக்குதல் என்று சொல்லிப் பிரச்சாரம் செய்த,
இன அழிப்பை எந்தப் பட்டியலில் இடுவது.

கிபிரிலா !?
பலூன் விட்டு படம் காட்டியவனிலா !?

4
மக்களை வெளியேறும்படி இராணுவம்
இறுதி யுத்தத்தில் 3 நாட்கள் யுத்த நிறுத்தம் செய்தும்,

மக்களை வெளியேற விடாமல் கேடயமாக இறுதிவரை கொண்டு சென்று பலி கொடுத்து,

இன்று இனப் படுகொலை பிரச்சாரம் செய்யும்,
இனப் படு கொலையை எந்தப் பட்டியலில் இடுவது.

கொன்றவன்மீதா !?
கொல்லக் கொடுத்தவன்மீதா !?

முள்ளி வாய்க்காலுக்குள் இருந்து மீறித் தப்பித்து வெளியேறிய மக்களை,
சொந்த மக்களென்றும் பாராமல்,
புலிகளால் மட்டுமே சுட்டுக் கொல்லப் பட்ட மக்களை,

இந்த இன ஆழிப்பு படியலில் சேற்கலாமா !?
அல்லது அவர்களை தேசத் துரோகிகள் பட்டியலில் சேற்பதா !?

நான் சொன்ன விடயங்கள் ஏதாவது யாருக்கும் தெரியுமா ?!

அல்து நான் சொன்னது ஏதவது யாருக்காவாது புரியுமா !?

45, 60, வயதாக இருந்தால் நான் சொன்னதை அனுபவத்தில் சந்தித்திருப்பார்.

30, 45, வாயதாக இருந்தால் பாதி அனுபவம் மீதி கேள்வி ஞானத்தால் அறிந்திருப்பார்.

25, 30, வயதாக இருந்தால் அவர் எந்தப் பகுதியின் கட்டுப்பாட்டில் இந்தர்கள் என்பதைப் பொறுத்தும் அவருடைய பகுப்பாய்வு செய்யும் சக்தியைப் பொறுத்தது.

25, கும் கீழ்பட்டவர்கள் என்றால் நான் எவ்வளவு முக்கியும் அவர்களுக்கு புரிய வைக்க முடியாது.

அவர்களுக்கு புரிய வைப்பதற்காக என்னால் சினிமா எல்லாம் எடுக்க முடியாது.

இந்தக் கடைசி பந்தியின் ஆழம் புரிந்தவனுக்கு மட்டும் நான் ஆரம்பத்தில் இருந்து சொன்னதை புரிந்து கொள்ள முடியும்.

இல்லையென்றால்.
நான் இதுவரை சொன்ன அத்தனைக்கும் பெறுமதி