காப்ரேட்டை வென்ற கலபையும்….. கரும் பலகையும்…..

ஒன்று இந்தியாவில் ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வந்த வேளாண்மை சட்டத்தை நீக்குமாறு நடைபெற்று வந்த போராட்டம்.

இன்று இந்திய ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண்மை சட்டத்தையும் இரத்துச் செய்யப் போவதாக அறிவித்திருக்கின்றது……!

அது போலவே…..

மற்றையது இலங்கையில் மூன்று மாதங்களுக்கு மேலாக நாடு தழுவிய ஆசிரியர்களின் கல்வி தனியார் மயமாவதை எதிர்த்தும் சம்பள உயர்வு கோரியும் நடைபெற்று வந்த போராட்டம்.

இலங்கையின் வரவு செலவு திட்டத்திட்டத்தில் ஆசிரியர்களின் சம்பள உயர்விற்காக 30 மில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளது இந்த வருட நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில்.

இரண்டு நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும் நாடு தழுவிய ரீதியில் இன மத கட்சி வேறுபாடுகள் இன்று விவசாயிகள், ஆசிரியர்கள் என்ற வகையிற்குள் ஒற்றுமையாக ஓரணியில் செயற்பட்;டதினால் பலம் பெற்று வெற்றி அடைந்ததாக உணர முடிகின்றது.

மேலும் போராட்டத்தின் நியாயத் தன்மையை பொது மக்களும் ஏனைய அரசியல் அமைப்புகளும் அறிந்திருக்கக் கூடியதாக இருந்ததும் கூடவே இந்திய விவசாயிகளின் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருப்பதும் இந்த வெற்றிகளுக்கான முக்கிய காரணங்களாக அமைகின்றன.

மேலும் இரு நாடுகளிலும் அசைக்க முடியாத அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ‘ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற சிந்தனையின் பால் செயற்படும் பயணப்படும் அரசுகளாகவும் இருப்பதுவும் அயல்நாடுகளாக இருப்பதுவும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இந்தியாவவில் முக்கிய மாநிலங்கள் தேர்தலும் நடைபெற இருப்பதுவும் இலங்கையில் உள்ளுராட்சி சபைகளின் தேர்தலும் நெருங்கும் சூழ்நிலையில் தேர்தலில் வெற்றி தோல்விகளை கருத்தில் கொண்டு இந்த விடயங்கள் ஆளும் அரசுகளால் கையாளப்பட்டிருப்பதாக அரசியல் அவதானிகள் கருத்துவதில் உண்மைகள் உண்டு.

இணைந்த கரங்களாக ஒரே குரலில் ஓரணியில் போராடும் எந்த போராட்டமும் தோற்றதாக வரலாறு இல்லை என்பதை மீண்டும் வரலாறு நிரூபித்தும் இருக்கின்றது.

இந்த கலப்பைகளின் போராட்டத்திற்கு எதிராக காப்ரேட் நலன்களை பாதுகாக்கும் கரங்கள் இருந்தன என்பதும் அதற்கான அரசாக தற்போதைய இந்திய இரசு இருப்பதுவும் வெள்ளிடை மலை.

கரும்பலகைகளின் போராட்டத்தின் நியாயங்களுக்கு எதிராக கொத்லாவலை என்கின்ற கல்வியை தனியார்மயமாக்கும் காப்ரேட்டுகளும் இருந்தன என்பதும் இதற்கு ஆதரவான அரசு இலங்கை அரசு பயணப்பட விரும்புவதும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இந்த போராட்டங்களில் கிடைத்த வெற்றிகள் புதிய போராட்டக் களங்களை திறக்கலாம் என்ற அச்சத்தை காப்ரேட் சிந்தனையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியும் இருக்கின்றது.