ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என்னும் கற்பிதத்தை, ஒரு குழந்தை பிறந்ததுமுதலே அதன் மனதில் விதைத்து பாலினச் சமத்துவத்தை அறவே ஒழித்து குழந்தையை வளர்த்தெடுக்கின்ற ஆணாதிக்கத்திலும் பெண்ணடிமைத்தனத்திலும் ஊறிக் கிடக்கும் பெற்றோர்கள் அவர்தம் குடும்பங்கள். இந்தக் கற்பிதத்தைச் சிறிதும் மாற்றமின்றி அல்லது இன்னும் கூடுதலாகப் பின்பற்றுகின்ற குடும்பங்களின் தெரு, ஊர், சுற்றுப்புறம்.