கொரனாவை விட கோரமான பொது மக்கள் மீதான தாக்குதல்

(சாகரன்)

உலகம் முழுவதும் அது இலங்கை இந்தியா என்று பிராணவாயு இல்லை மருந்து இல்லை என்று அவலக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த கொலைத் தாக்குதல் பற்றியும் பேசவேண்டி இருக்கின்றது என்ற மனவருத்தத்துடன் இந்த பதிவை தொடங்குகின்றேன். கூடவே இந்த பதிவிற்காக பயன்படுத்தப்படும் புகைப்படம் கூட எனக்கு கோரத்தின் தீவிரத்தை எடுத்துக் காட்டவே பயன்படுத்துகின்றேன். மற்றயபடி இந்தக் கருவிகள் உள்ள புகைப்பங்களை வெளியிடுவதில் அதிகம் உடன்பாடற்றும் இருக்கின்றேன். இனி விடயத்திற்குள் வருவோம்….