கொரனா: தீமையிலும் நன்மை

(சாகரன்)

கொரனாத் தீமை உலகை உலுக்க ஆரம்பித்த 2020 வருட ஆரம்பத்திற்கு முன்பு உலகை பெரியளவில் உலுகிக் கொண்டு இருந்த விடயம் பூமி வெப்பமடைதல் என்ற விடயமாகும். இது தொழில் புரட்சி ஏற்பட்ட பின்பு விவசாயம் நகரமயமாக்கப்பட்டதிற்கு பின்னரான கால கட்டங்களை விட அதிகம் வீச்செடுத்தது என்றால் மிகையாகாது.