கொவிட்-19 கதையாடல்-4: தடுப்பூசி என்ற மந்திரச் சொல்

(இந்த கட்டுரையில் கொரனா தடுப்பு மருந்தை பாவிப்பது உகந்தது அல்ல என்ற எண்ண ஓட்டம் ஆதிகம் செலுத்துவதாக மருத்துவத் துறைசார்ந்த வல்லுனர்கள் கூறுகின்றனர் அந்தக் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு எனவே இந்தக் கட்டுரையை அதன் அடிப்படையில் ஆய்வுக்கு உள்படுத்தி வாசிக்கவும் – ஆர்)

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

எப்போதும் எதிர்பார்ப்புகளோடுதான் வருடங்கள் தொடங்குகின்றன. ஆனால், இம்முறை எதிர்பார்ப்பு என்பது, இந்தப் ‘பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டுவருதல்’ என்பதை, அடிநாதமாகக் கொண்டிருப்பது வியப்பல்ல.