கொவிட்-19: கியூபா கைகொடுக்கும் பொழுதுகள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
இன்று உலகம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி புதிரானது. கண்ணுக்குத் தெரியாத, பொது எதிரியோடு போரிடும் யுத்தம் போன்றது. கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் சவால்களும் பல்பரிமாணம் உடையவை. எந்த உலக ஒழுங்கு, உலகைக் கடந்த அரைநூற்றாண்டுக்கு மேலாக ஆட்சிசெய்தோ அது, இன்று அவலப்பட்டு நிற்கின்றது. அது அமைத்த விதிகள், நெறிமுறைகள் குறித்தெல்லாம் அக்கறை கொள்ள யாருக்கும் நேரமில்லை.