கோடாகோகமவைக் கண்டு அஞ்சுவோர் யார்?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

காலிமுகத்திடலில் போராட்டங்கள் தொடங்கி ஒருமாதம் நிறைவடைந்த நிலையில் அதன்மீது வன்முறை ஏவப்பட்டது. அதை மக்கள் எதிர்த்து வெற்றிகண்டு மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டி ஏரியூட்டப்பட்டு சிதைக்கப்பட்ட கோடாகோகமவை மீள உருவாக்கி வலுபடுத்தியிருக்கிறார்கள். போராட்டக்காரர்கள் மீதான அரச வன்முறையைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வுகள் விரிவானதும் ஆழமானதுமான பார்வையை வேண்டுவன.