சட்டம் கொடுத்த அதிகாரம் இணைந்த வடக்கு கிழக்கு மகாணசபை

(சாகரன்)

1985 ஜுலையில் தமிழர் தரப்பு திம்புவில் ஓரணியில் ஒரே கோரிக்கையில் பலமாக நின்று இலங்கை அரசுடன் சமர் புரிந்து நம்பிக்கை ஏற்படுத்தினர். இந்தியா தனது நலன்கள்… தனது வேலைத் திட்டத்திற்கு அமைய செயற்பட முயலும் என்ற பிராதிய வல்லரசு என்ற சிந்தனையும் புரியப்பட்டாலும் அவர்களின் நலன்களை இலங்கை வாழ் சிறுபான்மையினம் தனது தேசிய இன விடுதலைப் போராட்டத்தை வெல்வதற்குரிய தந்திரோபாய செயற்பாட்டிற்குள் வெற்றியாக்கிக் கொள்ள வேண்டும் என்ற உலக ஒழுங்கில் தமிழ் பேசும் தரப்பு கையாண்டதாகவே திம்பு பேச்சுவார்த்தை முடிவுற்றது.