சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சட்டமும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும்

(எம். காசிநாதன்)
இந்தியாவின் “சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்” தொடர்பான வழக்குகளில், “முன் பிணை பெறுவது அரிது” என்ற ஓர் உறுதியான நிலைப்பாட்டை, இந்திய உச்சநீதிமன்றம் எடுத்திருக்கிறது. “பொருளாதாரக் குற்ற வழக்குகளில், முன் பிணை என்பது அரிதாகவே கொடுக்க வேண்டும். அதற்கு, இந்த வழக்கு உகந்தது அல்ல” என்று, முன் பிணை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், திகார் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.