சமகாலத்தில், எதிர்காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியும், இலங்கை முஸ்லிம்களும்……..01

(Fauzer Mahroof)
இந்த ஜனாதிபதித் தேர்தலில், ஜே.வி.பி. எடுத்துள்ள நிலைப்பாட்டைப் பற்றி பேசும் நோக்கம் இக் குறிப்புக்கு இல்லை. ஒரு அரசியல் இயக்கம் என்கிற வகையில் அவர்கள், அவர்களது அரசியல், மற்றும் கட்சியின் எதிர்காலம், கடந்தகால முடிவுகள் மற்றும் பிற விடயங்களை கருத்திற் கொண்டு ,தமக்குள் விவாதித்து ,அரசியல் ரீதியான ஒரு நிலைப்பாட்டினை எடுப்பதற்கு உரித்துடையோர்.