சமூகத்துக்காகப் பேச வேண்டியது யார்?

(மொஹமட் பாதுஷா)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன், நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, ”முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமை, அரசாங்கத்துக்குப் பெரும் வெட்கக்கேடான விடயம்’ எனச் சுட்டிக்காட்டியமை, முஸ்லிம் வெகுஜனங்களுக்கு மத்தியில் பேசுபொருளாகி இருக்கின்றது.