சமூக சேவகி, அரசியல் செயற்பாட்டாளர் வேதவல்லி கந்தையா

(சி.இராமச்சந்திரா)

வேதவல்லி கந்தையா அமரத்துவமடைந்து 22 வருடங்கள் கழிந்துவிட்டன. இவர் வாழ்ந்த காலம் 68 வருடங்கள். இக்காலப் பகுதியில் மகள், மனைவி, தாய், ஆசிரியை, சமூக சேவகி, அரசியல் செயற்பாட்டாளர் எனப் பல்வேறு பாத்திரங்களை சிறப்பான முறையில் இவர் வகித்துள்ளார்.