சாத்தான் ஒன்று வேதம் ஓதுது. அது சூத்திரச்சாத்தான்…

இன்று “எழுக தமிழ்” என்ற பெயரில் மாபெரும் இரு பேரணிகள் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றன. இந்த பேரணியில் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன்,செல்வம் அடைக்கலநாதன், ஆனந்தி எழிலன், கஜேந்திரன் உட்ப்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
மறு புறத்தில் ஈபிடிபியும் “எழுக தமிழ்” என்ற பெயரில் ஒரு பேரணியை டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடத்தியது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த இரு பேரணியில், காணாமல் போனோர், கடத்தப்பட்டோரின் விசாரணைகள், இடம்பெற வேண்டும் என்பது பிரதான அம்சமாக இடம்பெற்றது.

மேலே பெயர் குறிப்பிடப்படும் நபர்களை முறையாக விசாரித்தாலே பல காணாமல், கடத்தப்பட்ட, கொலை செய்யப்பட்டவர்களின் விபரங்கள் வெளிவரும். பலரை கடத்தி கொலை செய்த அல்லது அதற்கு காரணமான உத்தமர்கள், இன்று அவர்களை நினைத்து இரத்த கண்ணீர் வடிக்கிறார்கள். கோழி திருடியவன் கூட நின்று தேடிய இந்த இரு பிரமாண்டமான பேரணியில், “எழுந்தது தமிழ், வீழ்ந்தது சிங்களம்” என்று கற்பனை குதிரையில் ஓடுவோம், ஓடிக்கொண்டிருப்போம்.

(Sivachelvam Sellathamby Vinthan‎)