சாமானிய வெள்ளையின அமெரிக்கர்கள், தம்மில் ஒருவராகவே டொனால்ட் டிரம் பை பார்திருக்கிறார்கள்,

சாமானிய வெள்ளையின அமெரிக்கர்கள், தம்மில் ஒருவராகவே டொனால்ட் டிரம் பை பார்திருக்கிறார்கள், எனெனில் அவர் பேசியது வார்த்தை அலங்காரமில்லாத சாமானிய மொழி. பெண்கள் தொடர்பாக அவர் பேசியது எல்லாம் பொதுவாகவே எல்லா ஆண்களும் பேசுவதுதான். முகமூடி அணிந்தவர்கள் மறுக்கலாம். குடியேற்றம் அதிகமானால் தாம் சிறுபான்மையினராகி விடுவோமோ என்ற பயவுணர்வு


தகவல் தொழில் நுட்ப புரட்சியால் வேலைகள் வாய்புகள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு செல்கின்ற நிலைமை, மனிதகுலத்துக்கே பெரும் அச்சுறுத்தலை உருவாக்கிவரும் ஐஎஸ்ஐ யை , பேயுடன் கூட்டிச் சேர்ந்தாவது இல்லாமல் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்பு ( அமெரிக்கர்களை பொறுத்தவரை ரஷ்சியா பேய் )
முகமூடிகள் எதுவும் அற்ற உண்மையான அமெரிக்கா (ர்) இதுதான். இதனை டிரம் பிரநித்துவப் படுத்தியிருக்கிறார்.
அதே சமயம் கறுப்பு இன ஜனாதிபதியை கொடுத்ததும் இதே அமெரிக்காதான்
வியட்நாமில் அமெரிக்கா நடாத்திய முறையற்ற யுத்தத்துக்கு எதிராக குரல் எழுப்பியதும் இதே அமெரிக்கர்கள் தான்
இன்று சரி அரைவாசிக்கும் சிறிது கூடுதலான மக்கள் ஹிலாரிக்கே வாக்களித்திருக்கிறார்கள். எனவே அரசியலில் பக்குவமற்ற ஒரு சாமானியன் ஜனாதிபதியானதால் அமெரிக்கா தறிகெட்டுப் போய்விடும் என்று அச்சப்பட தேவையில்லை அமெரிக்காவுக்கே உரிய check and balance அங்கு உண்டு
மனிதசமுதாய வரலாறு என்றும்
முன்னோக்கியே நகரும் பின்னோக்கி நகராது
( குறிப்பு : நான் டிரம்பை வல்லவர்
நல்லவர் என்றெல்லாம் சொல்லத்தயாராக இல்லை. எவர் ஜனாதிபதியானாலும் பெரிய மாற்றங்கள் எதுவும் சடுதியாக ஏற்பட்டு விடாது எனது விருப்பு ஹிலாரியாகவே இருந்தது ஏன்னெனில் பெண் ஒருவரை ஜளாதிபதியாக்கிய பெருமையையும் அமெரிக்கா பெறவேண்டும் என்பதற்காக. அந்த வாய்ப்பு கைநழுவிப் போய்விட்டது இனி எப்போது வருமோ யாம் அறியோம் பராபரமே )

Noel Nadesan’s