(ஜனகன் முத்துக்குமார்)
வெனிசுவேலாவின் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்பதாக, அந்நாட்டின் தேசிய சபையின் தலைவர் குவான் குவைடோ, இவ்வாண்டு ஜனவரி 23ஆம் திகதி அறிவித்திருந்தார். ஐக்கிய அமெரிக்கா, பிரேஸில் உட்பட 50 நாடுகள் குவைடோவை அங்கிகரிப்பதற்கான அறிக்கையை வெளியிட்டிருந்தன. ஆயினும், வெனிசுவேலாவின் உச்ச நீதிமன்றம், தேசிய சபையின் குறித்த நடவடிக்கை அரமைப்பை மீறுகிறது என்பதை உறுதிப்படுத்தியிருந்ததுடன், ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ, ஐக்கிய அமெரிக்கா, கொலம்பியாவுடன் இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்ளும் தனது முடிவை அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.