செலாவணித் தட்டுப்பாடு: 1970களிலும் பஞ்சத்தில் மூழ்கடித்தது

(எம்.எஸ்.எம். ஐயூப்)

மின்சார விநியோகத்தைத் தடையின்றி நடத்திச் செல்ல, மின்வெட்டைத் தவிர வேறு வழியே, அரசாங்கத்துக்கு இல்லை என்று தான் தெரிகிறது. மின்சாரத்தோடு சகலதும் சம்பந்தப்பட்டு இருக்கும் நிலையில், மின்வெட்டுத் தொடர்ந்தால், நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில், சகல நடவடிக்கைகளும் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியாமல் போய்விடும்.