சே குவேரா

1967 ம் ஆண்டு அக்., 9ம் தேதி அவர் பொலிவியா நாட்டு வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்த போது உடன் இருந்த பெலிக்ஸ் ரோட்ரிகஸ் என்ற அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.,வின் அதிகாரி பி.பி.சி., செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் : சே குவேராவின் கடைசி தருணங்கள் மிகவும் பரிதாபமாக இருந்தன. அவர் இருந்த அறைக்குள் சென்றேன். அவரின் கைகள் பின் பக்கமாக கட்டப்பட்டு இருந்தன. அவர் யாருடனும் பேச விரும்பாதது போல காணப்பட்டார். என்னை திமிரான பார்வையுடன் பார்த்தார்.