ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி; சில கேள்விகள்

2020ஆம் ஆண்டுக்குரிய ஜனாதிபதித் தேர்தலில், மூன்றாவது அணியாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தன்னை களமிறக்கியுள்ளது. ஜே.வி.பி, சில சிவில் அமைப்புகளுடன் சேர்ந்து உருவாக்கியுள்ள ‘தேசிய மக்கள் சக்தி’யின் ஜனாதிபதி வேட்பாளராக, அக்கட்சியின் தலைவர் அநுர குமார திஸாயநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார். இதை அறிவிக்க, ஞாயிற்றுக்கிழமையன்று (18), காலி முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில், ஏராளமானோர் பங்குபற்றினர்.