ஜூலைக் கலவரம் தந்த பயன்களும் வீணாகிவிட்டன

(எம்.எஸ்.எம். ஐயூப்)
நாட்டின் தலைவிதியையே மாற்றி அமைத்த ‘கறுப்பு ஜூலை’ என்று பொதுவாக அழைக்கப்படும், தமிழர்களுக்கு எதிராக 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற கலவரங்கள் ஆரம்பித்து, இன்றோடு 36 வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஆனால், அந்தக் கொடுமைக்கு மூலகாரணமாக அமைந்த இனப் பிரச்சினைக்கு, நிலையான தீர்வொன்று இன்னமும் காணப்படவில்லை.