தண்டி யாத்திரையும் தண்டிக்கப்பட்டவர்களுக்கான யாத்திரையும்

(சிவா முருகுப்பிள்ளை)

இரண்டு வருடத்திற் மேலாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஆதரவாக மக்கள் விடாப்பிடியாக போராடி வருகின்றனர். எந்த வகையிலும் தமது உறவுகள் இலங்கை அரச படையிடம் 2009 மே மாதம் 18ம் திகதியளவில் ஒப்படைக்கப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டதற்குள் உள்ளாகி இன்றுவரை திரும்பி வராதவர்களுக்கான நியாயங்களை கோரிப் போராட்டம் செய்வதும் நியாயமானதே. உறவுகளைத் தொலைத்து போராடும் மக்களின் உணர்வுகள் புரியப்படக் கூடியது நியாயமானது, இதற்கு நாம் ஆதரவு வழங்கு வேண்டும்.