தனிமைப்படுத்தல் தண்டனையா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

கடந்த வருடம், மே மாதம் 17, 18ஆம் திகதிகளில், வடக்கில் பல இடங்களில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம், செம்மணியில் நடைபெற்ற அவ்வாறானதோர் அஞ்சலி நிகழ்வுக்குச் சென்ற வடமாகாண முன்னாள் முதலமைச்சரை, பொலிஸார் இடைவழியில் மறித்தனர். “நீங்கள் எமது பேச்சைக் கேட்காமல் சென்றால், உங்களை 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்துவோம்” என்று பொலிஸார் அவரை எச்சரிக்கை செய்தனர்.