தமிழக அகதிகள் முகாம்களில் இருந்து விமானத்தில் தாயகம் திரும்பும் அகதிகள்.கப்பல் சேவை எப்போது?

(அருளம்பலம்.விஜயன்)

இலங்கையில் ஏற்பட்ட இனச்சிக்கல்கள் காரணமாக 1983 தொடக்கம் இறுrefugees returnதி யுத்தம் நடைபெற்ற காலகட்டம் வரை இலங்கை தமிழர்கள் பல கட்டங்களாக தமிழகத்துக்கு அகதிகளாக வந்து தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். முகாம்களில் இருந்தவர்கள் பல கட்டங்களாக தங்களது சொந்த இடத்துக்கும் சொற்ப அளவில்அவ்வப்போது திரும்பிய வண்ணமும் இருந்தனார். இறுதியாக இந்திய- இலங்கைஒப்பந்தம் ஏற்பட்ட 1987 களில் பெருமெடுப்பில் கப்பலில் தாயகம் திரும்பினர்.

தற்போது கடலோர மாவட்டங்களைத் தவிர்த்து தமிழகத்தின் 24 மாவட்டங்களில் 107 முகாம்களில் 61422 பேர் தங்கியுள்ளார்கள். வெளிப்பதிவில் 31316 பேர் தங்கியுள்ளனர். முகாம்களில் உள்ளவர்கள் தமிழக அரசின் உதவிகள் பெற்றுக் வாழந்து கொண்டிருக்கின்றார்கள்.முகாம்களுக்கு வெளியில் வசிப்பவர்களுக்கு எந்தவித அரசு உதவிகளும் வழங்கப்டுவதில்லை.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து அரசியல் மாற்றம் ஏற்பட்டவுடன் முகாம்களில் உள்ளவர்களின் மனநிலையிலும் ஒரு மாற்றத்தைக் காணமுடிந்தது. தாயகம் திரும்ப வேண்டும் என்ற பேச்சுக்கள் நாலா திசைகளிலும் கேடட்வண்ணமே இருந்தது. அன்றைய நாளில் இருந்து விமானத்தில் சிறிய அளவிலானோர் சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்த ஆண்டு மே மாதம் வரை தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் 557 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். 10.7.2018 அன்று சென்னை-18, திருச்சி-07, மதுரை -24 நபர்கள் என 49 நபர்கள் தாயகம் திரும்பியுள்ளார்கள். பலர் தாயகம் திரும்பும் மன நிலையில் இருக்கின்றபோதும்.அவர்களுக்குள் தயக்கங்களும் அலைமோதிக் கொண்டுதான் இருக்கிறது. இந்தத் தயக்கத்துக்கு நியாயமான காரணங்களும் இருக்கத்தான் செய்கிறது.

நீண்ட பல வருடங்களாக முகாம்களில் இருப்பதால் தங்களது சொந்த இடத்துக்குச் சென்று என்ன செய்வது. தொழில், பொருளாதார தேவை ,பிள்ளைகள் எதிர்காலம். சொந்தக்காணி இல்லாதவர்கள். வீடு இல்லதவர்கள். கண்டு கொள்ளாத அரசியல் தலைமைகள் என பல காரணங்கள் அவர்களைத் தடுக்கிறது.

தற்போது சிறிய தொகையினர் விமானத்தில் தாயகம் திரும்பிய வண்ணமே இருக்கின்றனர். .கப்பல் சேவை தொடங்கினால் முகாம்களில் உள்ள கணிசமானவர்கள் தாயகம் திரும்பும் நிலை ஏற்படும். அத்துடன் அவர்கள் அதிகளவான பொருட்களை எடுத்தச் செல்ல முடியும். தற்போது விமானத்தில் ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிக அனுசரனையுடன் நாடு திரும்புகிற ஒரு நபர் 57கிலோ எடையுடைய பொருட்களையே தன்னுடன் எடுத்தச் செல்லமுடியும். இதனால் பல பயனுள்ள முகாமில் பாவித்த பொருட்களை அவர்கள் எடுத்துச் செல்லமுடிவதில்லை.

நீண்ட பல வருடங்களாக முகாம்களில் இருந்து தாயகம் திரும்பும் அகதிகள் தொடர்பாக இலங்கை.இந்திய அரசுகள் கொள்கை ரீதியான முடிவுகளை எடுத்தால் தாயகம் திரும்ப நினைப்பவர்கள் பல பலாபலன்களை அடைவார்கள்.அவர்கள் மனதில் உள்ள தயக்கங்கள் களையப்படும்