தமிழரசுக் கட்சியின் ஜனநாயகப் போக்கும் தமிழ் மக்களின் அபிலாசைகளும்

(இலட்சுமணன்)

முள்ளிவாய்க்காலில், 2009ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் ஸ்தம்பிக்கச் செய்யப்பட்டதன் பின்னர்தான், தாம் முழுநேரப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும் விடுதலைப் புலிகள் காலத்தில், பகுதி நேரமாகத்தான் அரசியலில் ஈடுபட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக்கட்சி, புதுக் கதையொன்றைச் சொல்லி வருகின்றது. இந்தக் கருத்துத் தொடர்பில், தமிழ் மக்களிடம் பல்வேறுபட்ட ஐயப்பாடுகள் எழுந்துள்ளன.