தமிழர்கள் சீனாவை நம்பலாமா?

இலங்கையில் சீனா: விளங்கிக் கொள்ளலும் வினையாற்றலும் – 07

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இந்தத் தொடரை எழுதத் தொடங்கிய நாள் முதல், ஒரு கேள்வி பின்தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. பலவகையான கோணங்களில், பார்வைகளில் விமர்சனங்களில் அக்கேள்வி எதிரொலித்துக் கொண்டே இருந்தது.