தமிழினியின் புத்தகத்துக்கு…….?

லூசுப் பயலுகளே.
தமிழினியின் புத்தகத்துக்கு அகரமுதல்வனின் எதிர்வினைதான் அந்தக் கதை. இந்தக் கண்டறியாத கைப் புண்ணுக்கு கண்ணாடி எதுவும் தேவையில்லை. இந்த வகையறா எதிர்வினை எத்தகைய உளவியலில் இருந்து முன்வைக்கப் படுகின்றன என்பதுதான் கேள்வி.

மாத்தையாவை உச்சியில் வைத்துக் கொண்டாடினீங்க, சனத்தையும் கொண்டாடச் சொன்னீங்க. பிறகு அவன் துரோகி எண்டு சொன்னீங்க. சனத்தையும் அந்தப்படிக்கே நம்பச் சொன்னீங்க.
கருணாவை வெளிநாடுகளுக்கு அழைத்தீக, செங்கம்பளம் விரிச்சுத, பூத்தூவி வரவேற்றீக, அவருக்கு யார் முதலில் அறுசுவை விருந்து வைப்பதென்பதில் ஆளையாள் அடிபட்டீக, “கருணா அம்மான் நல்லவர், வல்லவர், அதிசகாய சூரர், எனவே எல்லாரும் அம்மானை கோராஸாகப் பாடுங்கோ” எண்டீக.
பிறகு கருணாவை நீங்களே தொபுக்கட்டீரெண்டு கீழ போட்டீக. துரோகி எண்டீக. எங்கள் எல்லாரையும் அப்படியே சொல்லச் சொன்னீக.
இதே போல் பிள்ளையானையும் கொண்டாடினீக, அம்மான் எண்டீக, எங்களையும் கோரஸ் பாடச் சொன்னீக.
பின்பு பிள்ளையானையும் தொபுக்கட்டீரெண்டு போட்டீக. துரோகி எண்டீக. எங்களையும் அப்படியே சொல்லச் சொன்னீக.
தமிழினியையும் தலையில தூக்கி வச்சுக் கொண்டாடினீக. தொபுக்கட்டீரெண்டு போட்டிட்டு துரோகி எண்ட்றீங்கோ.
எல்லாத்தையும் நீங்களே சொல்றீக.
சனத்தை என்னதான் பண்னச் சொல்றீங்கோ.
உண்மையா உங்களுக்கென்ன மேல்வீடு தட்டிக் கிட்டிப் போச்சோ….?!

தமிழினியின் புத்தகத்தை வரவேற்கும் தேவையோ அல்லது நிராகரிக்கும் தேவையோ எமக்கு இல்லை.
வடக்கிலிருந்து ஒரே நாளில் முஸ்லிம் மக்களை வெளியேற்றியபோது தமிழினி எத்தகைய நடவடிக்கைகளை செய்த்தார் என்பதிலிருந்து மரணிக்கும்வரையான அவரது அரசியல் நிலைப்பாடும், செயற்பாடும் என்னவென்பதை நாங்களும் அறிவோம். அந்தச் சனமும் அறியும்.
ஆக தேவையா தேவையில்லையா என்று தேர்ந்தெடுக்கும் தேவையே எமக்கு இல்லை. அந்தத் தேர்வு உங்களுக்கானது.
நாங்க என்ன சொல்ல வாறதெண்டது உங்களுக்கு விளங்காமல் இல்ல. எண்டாலும் அலுக்கோசுத் தனமா மல்லுக்கு நிக்கிறீங்க.
திரும்பத் திரும்ப லூசுத்தனமா ஏதாவது உளறுவியளெண்டால் வீண் வம்பு தும்பு ஏற்படுஞ் சொல்லிப்போட்டன்.

(Thamayanthi Simon)