தமிழ்க் கவி… சோத்துக்காக இயக்கத்தை அண்டித்திரிந்தவர்

மலையகத்தமிழர்கள் போராட்டத்தில் இணைந்துகொண்டது தேசப்பற்றினால் இல்லை சமூக அந்தஸ்திற்காய்… :- தமிழ்க் கவி

சோத்துக்காக இயக்கத்தை அண்டித்திரிந்த நீங்கள் இதைச்சொல்லக்கூடாது அன்ரி. நீங்கள் எதுக்காக இயக்கத்துக்கு போனீங்க என்று கொஞ்சம் பின்னுக்குச்சென்று பாருங்க.

உங்களைப்போல சோத்துக்காக இயக்கத்துக்கு போனவங்கள் இல்லை வன்னிப்போராளிகள். பிறந்தது முதல் சுதந்திரக்காற்றை சுவாசித்து அந்த சுதந்திரத்திற்காய் இறுதிவரை உறுதிகுன்றாது போராடியவர்கள்.

சாள்ஸ் அன்ரனி படையணியின் அடிநாதம் வன்னிப்போராளிகள் தேசப்பற்றை அவர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டும். தேசப்பற்றில்லாமலா அவர்கள் போராடினார்கள்? பிரிகேடியர் பால்ராஜ் , லெப்.கேணல் சேகர் ,கண்ணாடி சந்திரன், தமிழினி போன்றவர்கள் தேசப்பற்றில்லாமல் சமூக அந்தஸ்த்திக்காகவா இயக்கத்துக்குப்போனார்கள்?

எழுந்த மானமாய் சமூகங்களுக்கிடையில் ஏற்றதாழ்வுகளை உருவாக்கும் கருத்துக்களை போகிறபோக்கில் எழுதிவிட்டுப்போகும் தமிழ்க்கவி போன்றவர்கள் எந்த ஆணிகளும் புடுங்காதிருந்தாலே போதும். சமூக ஒற்றுமையும் வளர்ச்சியும் ஏற்படும்.

(சுப்ரமணிய பிரபா)