தமிழ் நாட்டுத் தேர்தல்…

(சாகரன்)
மிகப் பெரிய ஆளுமைகள் கருணாநிதி, ஜெயலலிதா மறைவிற்கு பின்பு தமிழ் நாட்டில் யார் ஆட்செய்வது என்பதை தீர்மானிக்கும் சட்டசபையிற்கு நடைபெறும் தேர்தல் இது. இதற்கு முன்பு இவர்கள் இருவரும் இல்லாத நிலையிலும் இந்திய மத்திய அரசை தெரிவு செய்யும் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றாலும் அது மத்தியில் நடைபெறும் ஆட்சிக்கான தேர்தலாக இருந்தது. ஆதலால் இத்தேர்தல் அதிலிருந்து வேறுபடுகின்றது. அதனால் இந்த சட்டசபைத் தேர்தல் புதிய கவனத்தையும் பெறுகின்றது.