தமிழ் மக்களின் ’அரசியல் அணி’

(இல. அதிரன்)

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.சிவராம் (தராக்கி) காலத்தின் தேவை அரசியல் வேலை என்று குறிப்பிடுவார். காலத்தே பயிர் செய்தல் எல்லாவிதமான விடயங்களிலும் முக்கியம் பெறுகிறது. அதே போன்றுதான் இப்போதைய பூகோளவியல் அரசியல் மாற்றத்திலும் அரசியல் வேலையைச் சரியான முறையில் செய்தாகவேண்டிய கட்டாயம் தமிழ் மக்களுக்கும் அவர்களது அரசியல் தரப்பினருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதாவது வாய்ப்பைப் பயன்படுத்தியாகவேண்டுமென்ற நிலை மீண்டும் ஒருமுறை உருவாகி இருக்கிறது.