தமிழ் மக்களின் விடுதலையும் ஏமாற்று தலைமைகளும்

ஒருவாறு ஜனாதிபதித் தேர்தல் முடிந்துவிட்டது. அதன் சலசலப்பு அடங்கும் முன், அடுத்த தேர்தல் எம்முன் வந்து நிற்கிறது. வழமைபோல, இம்முறையும் தமிழர் உரிமை, தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணயம் என்று ‘பட்டங்கட்டி’ ஆட, வழமைபோலவே எமது அரசியல் தலைமைகள் தயாராகின்றன.