தளர்ந்து வரும் மஹிந்தவின் ‘பிடி’

(கே. சஞ்சயன்)
‘ஆடி போய் ஆவணி பிறந்தால், நல்லது நடக்கும்’ என்று சோதிடர்கள் கூறுவது வழக்கம். அதுபோல, ஆடி மாதம் முடிந்து, ஆவணி மாதம் எப்போது பிறக்கும் என்று, பிரதான அரசியல் கட்சிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில், ஐ.தே.க வரும் ஓகஸ்ட் ஐந்தாம் திகதி, தனது புதிய கூட்டணியை அறிவிக்கப் போகிறது. அதை ஒட்டியதாக, ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.