திறந்த வெளிப்படையான கடிதம்!!

(பூரணமாகவும், கச்சிதமாகவும், மற்றும் உண்மையாய் இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையுடன்)

பெறுனர்:
திரு. நீரஜ் டேவிட் மற்றும் திரு. ரவி அருணாச்சலம்,
IBC Tamil,
London, UK

திரு நீரஜ் டேவிட் மற்றும் திரு ரவி அருணாச்சலம் அவர்களுக்கு,

எனது பெயர் யோகீசன். 1980 களின் தொடக்கத்திலிருந்து எழுத்தாளரகவும், சமூக ஊடகங்களில் பல்வேறு தளங்களில் பங்களிப்பாளனாகவும் இன்று வரை நான் எழுத்துப் பணியில் இருக்கிறேன். மற்றும் பல்வேறு தலைப்புகளின் கீழ் சமூக ஊடகத்தில் பல கட்டுரைகள் கொடுத்துள்ள “புலோலியூரான்” என்ற ஒரு நன்கு அறியப்பட்ட நபர். IBC, TRT போன்ற தமிழ் ஊடகத்திலும் நன்கு பிரசித்தமானவன். எழுத்து மற்றும் கருத்துப் பதிவுகள் இதுவே என் பேரார்வம், மற்றும் அறியப்பட்ட மட்டத்தில் பொது ஊடகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளுடனும் என்னை நான் இணைத்துள்ளேன்.

என் தொழில் உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள், பொது, தனியார் மற்றும் அரச குடும்பத்தினருக்கு ஆலோசனை அம்சங்களை வழங்குவது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் மற்றும் உலகின் சில உயர் அங்கீகாரம் பெற்றவர்களும் இதில் அடங்குவர்.
2017 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி வெளியிடப்பட்ட கட்டுரையில் “ஐபிசி தமிழ்” பக்கம் 7ல் “அமெரிக்காவின் இரட்டை கோபுர வெடிகுண்டு தாக்குதல்களின் பின்னணியில் விடுதலைப்புலிகள்”. அதே தொடர்பாக, எனக்கு எழுந்துள்ள சில கேள்விகளுக்கு உங்கள் முடிவில் இருந்து சரியான பதில்களைப் பெற்றுக்கொள்ளவே இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

நீங்கள் ஊடகப் பகுதியில் ஒரு நம்பகமான ஆளுமை என நான் நம்புவதால், இங்கே என் கேள்விகளுக்கு பொருத்தமான பதில்களை எனக்கு தெரிவிக்க முடியும் என எதிர்பார்க்கிறேன்.

முதற்கண், கட்டுரையில் உங்கள் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனைத்து சரியான ஆதாரங்களை உடனடியாக வெளியிட வேண்டும்.

நீங்கள் அதே ஆதாரங்களை வைத்திருப்பீர்கள் என்றும், மற்றும் சரியான ஆதாரங்கள் இல்லாமல், இந்த விஷயத்தில் நீங்கள் ஈடுபட்டிருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

அப்படி ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில் என் கேள்வி என்னவென்றால் நீங்கள் எந்த கட்டாயத்தினால் இதற்கு உடன்பட்டீர்கள்? இதை செய்ய யார் உங்களை ஆதரித்தார்கள்? இதை செய்ய துணிந்த உங்கள் துணிகரத்திற்கு உங்களுக்குப் பின்னணியில் கிடைத்த பரிசு என்ன? இதை வெளியிடுவதற்கும் உலகளவில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் ஒரு பிரச்சினையை செய்வதற்கு ஏதேனும் ஒரு சிறப்பு காரணங்கள் இருக்கிறதா?

ஒருவேளை அமெரிக்க அரசு இதை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், அமெரிக்காவால், உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகத்திற்கு இந்த செய்தியின் உட்குறிப்புகளால் ஏற்படும் பின் விளைவுகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைய அரசியல் ஆட்சியாளர்களாலும் இதற்கு முன் இருந்தவர்களாலும், தமிழ் சமூகத்திற்கு இலங்கையில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள பின்னடைவை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் கட்டுரை கண்டிப்பாக எரியும் தீயில் எரிபொருளைச் சேர்க்கும், இது தமிழரின் வாழ்வியலின் ஒவ்வொரு பரிமாணத்தையும் கெடுத்துவிடும்.

நீங்கள் ஒரு நல்ல எழுத்தாளராக இருக்கலாம், ஆனால் சில தார்மீக பொறுப்பைக் கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் எழுத்து வழியில் இது போன்ற பயணத்தை நீங்கள் செய்தால் உங்களை சிக்கல் படைப்பாளர் என்றே அழைப்பர்.

எவ்விதமான சம்மந்தமுமின்றி 2001 ல் அமெரிக்காவில் நிகழ்ந்த சம்பவத்திற்கு நீங்கள் இப்போது ஒரு இணைப்பைக் கொடுத்து வருகிறீர்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் உள் யோசனை என்ன?

உண்மைகளை கருத்தில் கொள்ளாமல் நீங்கள் எழுதினவைகளை உண்மை என்று அமெரிக்கா எடுத்துக் கொண்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுக்கும் பட்சத்தில் அதன் தாக்கத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அவர்கள் தமிழ் சமூகத்தை ஒரு பெரிய அளவில் தொந்தரவு செய்வர். மேலும், உலகளாவிய அளவில் வாழும் தமிழ் இனம் உலகம் முழுவதும் எதிர்மறையான பல வழக்குகளை எதிர்கொள்ளும்.
எதன் அடிப்படையில் நீங்கள் இதனை எழுதியுள்ளீர்கள். மேலும் இதனை எழுதத் தூண்டியது எது? இதைப் பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இது சரியான ஒன்று இல்லையெனில், நீங்கள் உடனடியாக ஏதாவது ஒரு திருத்தத்தை அறிவிப்பதன் மூலம் அதை திரும்பப் பெற அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

இந்த கடிதத்தின் இன்றய தேதியிலிருந்து 14 நாட்களுக்குள் இதனைச் செய்ய தவறுவீர்களானால், நான் உங்களுக்கு மற்றும் “ஐபிசி தமிழ்” நிர்வாகத்திற்கும் எதிரான சட்ட நடவடிக்கைகளை, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க கூட்டாட்சி அதிகாரிகளின் முறையான அதிகாரபூர்வ ஆதரவுடன் எடுக்கவும் உள்ளதாக எச்சரிக்கிறேன்.

என் நடவடிக்கை செயலாக்கப்படும் பட்சத்தில் உண்மையிலேயே நீங்களும் மற்றும் உங்களுடைய நிர்வாகமும் உலகளாவிய ரீதியில் மிகுந்த தொல்லைகள் மற்றும் சங்கடத்துக்கு உள்ளாவீர்கள். அவற்றிற்கு தேவையான அளவுக்கு எனது சக்தியையும், அதன் சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்த பின்னரே இதனைத் தெரிவிக்கிறேன்.

தயவுசெய்து இந்த செய்தியை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் உங்களது சரியான மறுப்புடன், மறு-அறிவிப்புடன் வெளியிடுங்கள். கல்வியறிவு பெற்றவர்களாகவும் கலாச்சாரத்துடனும் வளர்க்கப்பட்டவர்களாகவும், அதற்கேற்ப நீங்கள் கடமைப்பட்டவராக நீங்கள் இருப்பீர்கள் என்றே நான் நம்புகிறேன்..

என் அணுகுமுறை உங்களுக்கு ஒரு வேண்டுகோள் அல்ல, ஆனால் இது ஒரு கடும் எச்சரிக்கையே. இந்த வகை முட்டாள்தனத்தை உடனடியாக அமல்படுத்துவதைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல் உங்கள் வழியில் இனிமேலும் தொடரக்கூடாது.

உங்களது பதிலை விரைவில் எதிர்நோக்கும்,
யோகீசன்
புலோலியூரான்