திலீபன் சிறுவயதில் தாயைஇழந்த ரௌடியா? தியாகியா?

1. தமிழ்க்கவி(Thamayanthy Ks) சொல்கிறார்.
“உண்ணாவிரத மேடைக்குப் போகும் போதே திலீபன் இறப்பது …நிச்சயம் என்பது உறுதியாகவே இருந்தது. இடையில் நடந்ததெல்லாம் நாடகத்தின் காட்சிகளே.மக்களை புலிகளின்பால் மீட்டெடுக்க இந்த நாடகம் தேவையாக இருந்தது. இந்திய அமைதிப்படையின் வருகை புலிகள் விரும்பாத விடயம். வீணாக கொடுத்த விலை. அவ்வளவே.”

2. சிவா முருகுப்பிள்ளை சொல்கிறார்.
“பல இடங்களில் திலீபனின் கொலை வெறி செயற்பாடுகளை பதிவு செய்து வந்திருக்கின்றேன். மீண்டும் பதிவு செய்கின்றேன். ரெலோவை துப்பாக்கியானல் சுட்டு கொலை பாதகச் செயல்களை அரங்கேற்றுவதில் யாழ்பாணத்தில் கிட்டுவிற்கும் திலீபனுக்கும் இடையில் ஒரு போட்டியே இருந்தது. இதனை புலிகளின் தலமை (பிரபாகரன்) திட்டமிட்டு செய்திருந்தார். கிட்டுவிற்கு யாழ்ப்பாணத்தில் புலிகளுக்குள் ஏற்பட்டுவந்த செல்வாக்கு பிரபாகரனுக்கு எரிச்சல் ஏற்படுத்த, அதுவரை அரசியல் துறைப் பொறுப்பாளர் என்று அடையாளப்படுப்பட்ட திலீபனை ஆயுதச் செயற்பாட்டாளர் என்று நிலையிற்கு ‘உயர்வு’ வழங்கி இதனை ‘திறம் பட’ செயற்படுத்த திலீபன் எடுத்துக் கொண்ட விடயம் காலகட்டம் எல்லாம் ரெலோவின் அழிப்பு.

சிறீசபாரத்தினம் கட்டைப்பிராயில் இருந்து தப்பி தபால் பெட்டி ஒழுங்கையினால் யாழ் பல்கலைக் கழக பின் வீதியால் ஓடிய போது அவர்களை கொல்ல கொலைவெறி பிடித்த நாய் போல் துரத்தி வந்தது திலீபன் தலமையினலான குழுவே. இதற்கு நான் கண்கண்ட சாட்சி. இன்று மேயர் பதவியை ஏற்றவுடன் மற்றய எந்த விடயத்தையும் தவிர்த்து முதலில் திலீபனின் சிலை திறப்பு என்பதுவும் அப்பட்டமான மனித விரோத செயல். அதுவும் பல்வேறு கொலைகளுக்கு பொறுப்பாக இருந்த திலீபனுக்கு. இந்த மேயர் பதவிக்கு வர உறுதுணையாக இருந்த யாவரும் இதற்கான வருத்தத்தை தெரிவிக்க வேண்டும். நகரை நிர்வகிப்பதைவிடுத்து அதுவும் சிறப்பாக குப்பை கூழங்கள் நுளம்பு அகற்றல் வெப்பம் தணித்தல் குடிநீர் பிரச்சனை நெருசல் போன்ற பல பிரச்சனைகளை தீர்க்க வேண்டி இடத்தில் வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய விடயம். மாநகரசபையின் இணக்க அரசியல் இதனை அனுமதிக் கூடாது.”

3. முறிந்தபனை நூல் சொல்கிறது.
“விடுதலைபுலிகளால் படிப்படியாகக்கட்டி எழுப்பபட்ட காட்சிச்சித்திரம் அடிப்படையில் வன்முறை சார்ந்த ஒன்றாகும். தூர இடங்களிலிருந்து நல்லூருக்கு ஊர்வலம் வந்த மக்கள் கூட்டத்தினர் ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட கார்களிலிருந்து எழுப்பப்பட்ட அச்சுறுத்தும் கோஷங்களையே உரத்துக் கூறிச்செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். “பிரபாகரனே எங்கள் தலைவர், திலீபன் மரணமடைந்தால் தமிழீழம் வெடிக்கும் எரிமையாகும்” என்பன பிரப்ல்யமான சில கோஷங்களாகும். திலீபனின் மீது ஒளிகுவிந்திருந்தாலும் முதலாவது கோஷம் பிரபாகரனைக் காட்சியில் வைத்தது. இரண்டாவது கோஷம் உண்மையில் என்ன கருதுகிறதென்று யாருக்கும் தெரியவில்லை. கந்தசாமி கோயிலில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் ஆழ்ந்து அவதானித்தவர்கள் பல்வேறுபட்ட அபிப்பிராயங்களுடன் வெளிச் சென்றனர். சிலர் திலீபனின் உறுதியை மெச்சினர், சிலர் திலீபனை வேண்டுமென்றே மெதுமெதுவாக கடுமையான வேதனையோடு சாகவிட்ட பரீட்சார்த்தத்தை விடுதலைபுலிகள் திலீபனின் மீது மேற்கொண்டதாக புலிகளைக் குறை கூறினர். திலீபன் தன் சுய உணர்வோடு இருந்தபோது தான் தண்ணீர் அருந்தக் கேட்டால் தனது உறுதியில் மீதான கட்டுப்பாட்டினை இழக்கப்பனுகின்ற பலவீனமாக அது அது அமைந்துவிடும் என்றும் அவ்வாறு தான் கோரினால் அதனை நிராகரித்து விடுமாறு அறிவுறுத்தல்களை விடுத்ததாகச் சில குறிப்புகள் தென்படுகின்றன எனினும் பிரபாகரன் கருனை கொண்டு உண்ணாவிரதத்தை முடித்துவைப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். அது அப்படி நடந்திருக்க முடியவில்லை.

திலீபன் எதைத் தீர்மானித்திருந்தாலும், அவர் சுயநினவு இழந்த போது அவருக்கு உணர்வூட்டும் பிரச்சினையை மூத்த விடுதலைப்புலி நிர்வாகஸ்தர் ஒருவரிடம் ஒரு சனசமூகத் தலைவர் எழுப்பியபோது சிக்கலின் கூறுகள் சில வெளிப்படலாயின. இப்பிரச்சினையில் தாங்கள் இறுதி முடிவு எடுத்துவிட்டதாக அவருக்கு கூறப்பட்டது. வெளிக்காரணிகளும் நிலமை அதுதான் என்பத்தையே புலப்படுத்தின. அக்டோபர் 5ம் திகதி பன்னிரண்டு விடுதலைப்புலிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த அனுமானம் மேலும் வலுப்படுவதாகவே இருந்தது. தமிழீழம் குமுறும் எரிமலையாக வேண்டும் என்று விடுதலைப்புலிகள் ஏற்கனவே தீர்மானித்து விட்டதாகவே தோன்றியது.
( முறிந்தபனை முதற்பதிப்பு பக்கம் 191ல் )

4. J.N. டிக்சித்( இந்.தூதுவர்) கூறுகிறார்.
” பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டபின் பிரபாகரன் நல்லூர் உண்ணாவிரத மேடைக்கு என்னை அழைத்தார். “நான் வந்து தண்ணீர் கொடுத்தால் திலீபன் அதனை ஏற்று அருந்தி உண்ணாவிரதத்தை கைவிடுவதை உறுதிப்படுத்தினால் வருவேன் என்றேன். பிரபாகரன் எனக்கு உறுதிமொழி தரமுடியாது என்றார். திலீபன் உறுதியான போராளி. அவர் மறுக்கக்கூடும் என்று எனக்கு பிரபாகரன் நயவஞ்சகமாக பதில்தந்தார். என்னை நல்லூரில் வைத்து அவமானப்படுத்தி புலிகள் அரசியல் லாபம்தேட முனைவதை புரிந்துகொண்டேன்.

(Arun Ambalavanar)