தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 12)

சம உரிமைப் போராட்டமாக தொடங்கி எதிரிகளின் கொலைவெறியால் இப்போது சமூகங்களிடையேயான பழிவாங்கலாக மாறிவிட்டது.நமது சமூகத்தினர் திடீரென அமைதியானார்கள்.வழமைபோலவே செயற்பாடுகள் இயல்பு நிலை திரும்பின.ஆனாலும் இரத்தினம் பற்றிய பேச்சு தொடர்ந்தது.இரத்தினம் இல்லாத்தால் மீண்டும் அவர்கள் ஊரைத் தாக்கலாம் என்ற அச்சம் சிலரிடையே இருந்தது.அவரகளும் அமைதியாக செயலாற்றினார்கள்.அவரகளில் சிலர் இரண்டு கைக்குண்டுகளை கொண்டுவந்தார்கள்.இது திரியை வாயால் இழுத்து எறிவது.இது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.ஆனால் இதை யார் வைத்திருப்பது,எங்கே வைத்திருப்பது என்ற பிரச்சினை உருவானது.வைத்திருப்பவர் கண்டிப்பாக அதனுடன் இருக்க வேண்டும்.இது உயிர் பாதுகாப்பு சம்பந்தமானது.அத்துடன் பொலிஸ் கெடுபிடியும் கூடியது.அப்போது எமது ஊரில் எல்லா வீடுகளும் குடிசைகளே.அது என்னவென்றே தெரியாதவர்கள்.ஆகவே இதை காட்டில் உள்ள கூழா மரத்தின் அடியில் வைத்திருந்தனர்.இதை யாழ்பாண நகரில் இருந்து ஊருக்கு கொண்டுவர இரண்டு நாட்கள் எடுத்தன.

சில வாரங்கள் கழிய ஒரு தகவல் கிடைத்தது.எதிரிகள் கொடிகாமத்தில். வேலாயுதம் என்பவர்கள். வீட்டுக்கு வந்து போவதாக சொன்னார்கள்.எதிரிகளின் பலம் எமது தேவைக்கான போக்குவரத்துக்கள் யாவும் அவர்கள் பகுதியூடாகவே நடைபெறும்.இது எமக்கு பெரிய பாதகமான விசயம்.கொடிகாம்ம் நடந்து போவதாயின் இரண்டு மைல்கள் பெரும் புழுதி ஒழுங்கைகளால் போகவேண்டும்.றோட்டால் போவதாயின் நான்கு மைல்கள் வரும்.வேலாயுதம் வீடு கண்டி வீதியில் இருக்கிறது.காரில் போய் அங்கே இறங்கமுடியாது.மேலும் ஒரே ஒருவர்தான் நமது ஆள் வாடகைகார் வைத்திருந்தார்.எமது எல்லை சிறு தூரம் தாண்டிய பின் எல்லா வீடுகளுக்கு வெள்ளாளர் கோவியர் வசிக்கும் பகுதிகள்.பகலில் போக முடியாது.அடையாளம் தெரியும்.இரவில் நம்மூர் நாய்களின் ஊளைகள் காட்டிக்கொடுக்கும். ஆனால் இவை எல்லாவற்றையும் யோசிக்கும் மன நிலையில் எமது ஊர் இளைஞர்கள் இல்லை.எப்படியோ திட்டமிட்டவரகள் யாரிடமும் சொல்லாமல் இருளும்போது புறப்பட்டார்கள்.வேலாயதம் வீடு ட வகையில் சுற்றிவளைக்கப்பட்டது.

துருவிப்பாரத்தால் வேலாயுதம் அங்கே இல்லை.அவர் வாடகை கார் வைத்திருப்பவன்.கார் இல்லை.இவரகள் துணிவோடு அவன் வளவுற்குள்ளே ஒழிந்து கிடந்தார்கள்.நேரம் செல்ல கார் உள்ளே நுளைந்தது,கார் லைற் நூரத்து காரால் இரண்டு கதவாலும் இறங்க வெடி விழுந்தது. குறி தவறவில்லை .இரண்டு பேர் விழுந்தனர்.இவரகள் கார் லைற் அணைந்ததும் ஆட்களை அடையாளம் பிடிக்க முடியவில்லை.வெடி பட்டது டிரைவருக்கும் இன்னொருவருக்கும்.

இவரகளின் எண்ணம் வேலாயுதம் ,தில்லைநாதன் ஆகியோர் இறந்துவிட்டனர் என நினைத்து ஊருக்குத் திரும்பினர்.வரும்போது துணிவாகவும் எச்சரிக்கையாகவும் வந்து சேர்ந்தனர்.மறுநாளே இவர்களுக்கு இறந்தவர்கள் யாரென்று தெரிந்தது.இவரகளுக்கு பெரும் ஏமாற்றம் தந்தது.ஆனால் சாதிவெறியர்கள் நிலை குலைந்தனர் .காரணம் இவ்வளவு தூரம் ஊடுருவி துணிச்சலாக செய்துவிட்டு அவர்கள் பகுதியாலேயே திரும்பிவிட்டார்கள்.

இரத்தினம் இறந்தபின்பே அவர்கள் விலை கொடுக்கத் தொடங்கினர்.உண்மையில் எந்த பழிவாங்கல் உணர்வின்றி உரிமைக்காக தொடங்கிய போராட்டம்,ஆதரவளிக்க வேண்டிய அவர்களே எம்மை எதிரிகளாக கருதி எதிர்களத்தில் நின்று உயிரிழக்கிறார்கள்.

சங்கானை, அச்சுவேலி, மந்துவில், மாவிட்டபுரம் எல்லாக் களத்திலும் கோவிய சமூகமே வீணாக பலியானது. வேலாயுதம் வளவு சம்பவத்தை அடுத்து சந்தேகத்துக்கு இடமானவர்கள் மட்டுமன்றி பயந்தாங்கொள்ளிகள் கூட கிளிநொச்சி கண்டாவளை பரந்தன் என ஓடிவிட்டனர். ஆனாலும் மந்துவில்,உறங்கவில்லை.நீறுபூத்த நெருப்பாக அமைதியானது.

(தொடரும்….)

(விஜய பாஸ்கரன்)