துறவறமும் திருமணமும்: பாப்பரசர் எதிர் பாப்பரசர்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
காலமாற்றத்துடன் மாற்றங்கள் நிகழ்வது இயற்கை. ஆனால், இம்மாற்றங்கள் நிச்சயம் நிகழும் என்பதற்கான உத்தரவாதம் எதுவுமில்லை. மாற்றங்கள் தேவைப்பட்டாலும், தவிர்க்க இயலாததாக இருப்பினும், அவை நிகழாமலும் இருந்திருக்கின்றன. இது மாற்றத்தை வேண்டிநிற்கும் விடயமும் அதுசார் அமைப்பும் தொடர்பானது ஆகும்.