தேசத்தின் சுதந்திரம் என்பது பெண்களின் சுதந்திரத்தைசார்ந்தது!

சமகால உலகிலும் எமது நாட்டிலும் பெண்கள் பாரிய அளவு சவால்களை எதிர் கொள்கிறார்கள். ஊலகளாவிய அளவில் யுத்தம் பேரழிவு இன நிறவாதங்கள் வர்க்க ஏற்றத்தாழ்வு என்பன பெருமளவு பெண்களையே பாதிக்கின்றன.

எமது பிரதேசங்களில் பரவலாக நிகழும் வன்முறைகள் கொலைகள் பாலியல் வனமுறைகள் பெண்களும் சிறுவர்களுமே பெருமளவு இலக்கு வைக்கப்படுகிறார்கள்.பொதுவாக சமூகத்திலும ;குடும்பத்திலும் நிகழும் வன்முறைகளில் அதி அனர்த்தங்களை சந்திப்பவர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள்.நீண்ட நெடிய யுத்த காலம் பாரிய அளவில் பெண்களை பாதித்தது. உயிரழிவு அகதிமுகாம் வாழ்வு இடம்பெயர்வு இங்கு பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் நிலைதான் பாரதூரமானது.

பிரதானமாக சமூகபாதுகாப்பு பெண்களின் கண்ணியம்;, கௌரவம் பாதுகாக்கப்படுவதற்கு ஒவ்வொரு விடயத்திலும் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் விதமாக கவனம் செலுத்தப்படவேண்டும். ஒருதேசத்தின சுதந்திரம என்பது பெண்களின் சுதந்திரத்திலேயே தங்கியிருக்கிறது. பொருளாதார அரசியல் உரிமைகள் சார்ந்தது

நாடளாவிய அளவில் பெண்களின் சமூகபாதுகாப்பு வாய்ப்புகள் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படவேண்டும். உள்ளுராட்சியில் மாத்திரமல்ல. மக்கள் பிரதிநிதித்துவத்தின் சகல அம்சங்களிலும் மாகாண சபை பாராளுமன்றம் உட்பட பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படவேண்டும். பெண்களுக்கான ஜனநாயக இடைவெளி சந்தர்ப்பம் என்பனவே நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

கல்வி வேலைவாய்ப்பு நிர்வாகம் இதர துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படவேண்டும்.ஆனால் பெண்களின் நலன் சார்ந்த செயற்பாடுகள் அதிகாரமட்டத்தில் மிகவும் பலவீனமாகவே காணப்படுகின்றன

நிலமானிய சமூகத்தில் எச்சசொச்சங்கள் இன்றளவில் நிலவுகின்றன. சமூகம் -நிர்வாகம்- அரசியல் அதிகாரமட்டத்தில் மாற்றம் வேண்டும். அதிகளவிலான யுத்த வன்முறைகள்- சமூகவன்முறைகள் குறிப்பாக வடக்குகிழக்கிலேயே நிகழ்ந்துள்ளன.

அரசபயங்கரவாதம் -பயங்கரவாததடைச்சட்டம்- இயக்க வன்முறைகளில் பாரியஅளவில் பெண்கள் பாதிக்கப்பட்டார்கள.; யுத்தம் முடிந்தபின்னர் சமூக அநீதி சமூக வன்முறைகளை எதிர் நோக்குபவர்களாக பெருமளவில் பெண்களே.

•காணாமல் ஆக்கப்பட்டஉறவுகளைத் தேடுவது
•படையினரின் பிடியில் உள்ள நிலங்ளை மீட்பதற்கான போராட்டம்
•வீடுதொழில் பிள்ளளைகளின் கல்வி தொடர்பான சவால்கள்.
•சமூக மனோபாவத்தினால் ஏற்படும் பிர்ச்சனைகள்.
•இயக்கத்தில் இருந்தவர்களை சமூகம் பார்க்கும் பார்வை
•மாற்றுத்திறனாளிகளான பெண்கள் கைவிடப்பட்டுள்ள நிலை.
•சமூகஒதுக்கல்
•நம்பிக்கை அளிப்பதற்கான செயற்பாடுகளை மக்கள் பிரதிநிதிகள எனப்படுவோரோ-மாகாணமத்திய அரசாங்கங்களோ போதியகவனம் எடுக்காமை.
•பிரதானமாக சமூகபொருளாதார பாதுகாப்பு,வாழ்வு பற்றியகரிசனை குறைவு.

வடக்குகிழக்கு இலங்கையில் இன்று வறுமை கூடிய பிராந்தியங்கள்.

இந்த வறிய குடும்பங்களின் சேமிப்பெல்லாம் இந்த நுண்கடன் வசூலுக்கு தாரைவார்க்கபட்டுள்ளன. சேமிப்பென்று எதுவும் கிடையாது. லீசிங் கம்பனிகளின ;முகவர்கள் மக்களுடன் கண்ணியமாக உரையாடுவதில்லை என்றகுற்றச்சாட்டு பரவலானது. கெடுபிடிகள் தற்கொலை குடும்பபிரச்சனைகளை அதிகரித்துள்ளன. பெருமளவிற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ,நிலவிடுவிப்பு, சிறைகைதிகள் விடுதலைக்கான போராட்டங்களை பெண்களே முன் நின்று நடத்துகிறார்கள்.

ஆனால் அரசஅதிகாரமோ அல்லது மக்களின் பிரதிநிதித்துவமோ மிகவும் மெதுவாக தயங்கி, சோம்பல் முறித்தபடிதான் மக்களின் கோரிக்கைளைசெவிமடுக்கிறார்கள். மக்களின் பிரச்சனைகளை திறந்தமனதுடன் அணுகுவதாக இல்லை. மாதக்கணக்கில்; வருடக்கணக்கில் மக்கள் தமது நிலத்திற்காக போராடுவது ஏதோ இயல்பானது வழமையானது என்றளவில் அதிகாரவர்க்கத்தின் மனோபாவம் சொரணையற்றுப போயுள்ளது.

நிர்வாக இயந்திரமும் மக்கள் பிரதிநிதித்துவமும் பழுதடைந்துள்ளன. மக்கள் இன்பதுன்பங்களில் அவைபோதியஅளவில் பங்குபற்றுவதாக இல்லை. போராட்டகாரர்கள் பிரதானமாக பெண்களே.தனிமை, வெறிச்சோடிய ஊர்கள் ,பாதுகாப்பின்மை- பெண்களின் பிரச்சனைகளை பரிவுடன் அணுகுவதற்கான பொறிமுறைகள் அரச நிர்வாகத்தில் வலுவாக இல்லை. பொலிசைப்பற்றி இங்குசொல்லவே தேவையில்லை.

யுத்தம் முடிவடைந்து 8 வருடங்கள கடந்தும் அநீதி இழைக்கப்பட்டதாக கருதும் பெருமளவிலான மக்கள் பகுதியினர் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அலட்சியப்படுத்தப்படுகிறார்கள். பெண்களின் பிரதிநிதித்துவத்தை உள்ளுராட்சிசபைகளில் 25 வீதமாகஉறுதிப்படுத்தியிருப்பது இலங்கையின் தேர்தல் முறையில் பெண்களின் நலன் சார்ந்த ஒரு முக்கியத்துவம் வாய்ந்தமாற்றம். எனினும் இது இனிமேல் தான் ஆரம்பம்.

கிழக்குவடக்கில் பெண்களின்நிலை தொடர்பாக தாக்கமாக செயற்படுவதற்கான செயலணி மத்திய- மாகாண- பிரதேசமட்டத்தில் ஏற்படுத்தப்படவேண்டும். உள்ளுராட்சி மட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பெண்களையும் உள்ளடக்கியதாக இது அமையவேண்டும். பொலிஸ் உட்பட சகல நிர்வாக அலகுகளிலும் தொழில் துறைகளிலும் பெண்களுக்கென தனிப்பிரிவு ஸ்தாபிக்கப்படவேண்டும். பெண்களின் உரிமைகளைப் பற்றிய போதனைகள் பாடசாலை மட்டத்திலிருந்து மேற்கொள்ளப்படவேண்டும்.

சனசமூகநிலைய செயற்பாடுகள் மாதர்சங்கங்கள் செயலூக்கமுள்ளவையாக மாற்றப்படவேண்டும். உள்ளுராட்சி வளங்களை அடிப்படையாக கொண்ட சுய தொழில்கள் உள்ளுர் சர்வதேச தேவைகளுக்கேற்ப விருத்திசெய்யப்பட வேண்டும். சிறார் பாடசாலைகள் பெண்களை மாத்திரம் கொண்ட அல்லது பெருமளவிறகு கொண்ட நிர்வாக அலகுகள் சேவைதுறைகள் ஏற்படுத்தப்படவேண்டும்.

நவீனதொழில் துறைகள் பற்றிய பயிற்சி நெறிகள் உருவாக்கப்படவேண்டும். பெண்களின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பாக குரல் கொடுப்பதற்கு பிரத்தியேக செயலணி ஒன்று உருவாக்கப்படவேண்டும். இன வன்முறைகள சமூகநீதி நிராகரிப்பு போன்றவற்றில் பெருமளவுக்கு பெண்களே இலக்கு வைக்கப்படுகிறார்கள்.

இப்போது முஸ்லீம் பெண்கள் சிறுவர்களின நிலையை எண்ணிப்பாருங்கள். உலகில் யுத்தம் நிகழும் இடங்களில் சிறுவர்கள் பெண்களின் நிலை? அகதிகளாக படகுகளில் ஆபத்தான பயணங்களில் பாலைவனங்களில் உறைகுளிர் காடுகளில் பெண்களும் சிறுவர்களும் அலைகிறார்கள்.

சர்வதேசஅளவில் பெண்களின் உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கபடுகின்றன என்ற அனுபவங்கள் இங்குபகிரப்படவேண்டும்.யுத்தமற்ற உலகோ- இயற்கை புவிக்கோளை பாதுகாப்பதோ- நாட்டில் சமாதான சகவாழ்வோ மனிதகுலத்தின் அரைபங்கினரான பெண்களின் பங்களிப்பு வேண்டும்.

-ஞானசக்தி-