தேசிய பட்டியல் நியமனங்கள்: கட்சிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

கடந்த பொதுத் தேர்தலின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலேயே போட்டியிட்டது. ஆயினும், கட்சியின் பொரும்பாலானோர் அதேகட்சியின் கீழ் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவாளர்களாகவே இருந்தனர். மஹிந்த ஆதரவாளர்களான டிலான் பெரேரா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, எஸ்.பி திஸாநாயக்க ஆகியோர், தேர்தலில் தோல்வியுற்றனர்.