தோழர்களை நினைவுகூர்வோம். …….

வன்னி மாவட்டத்தில் பெரிய தம்பனையில் பிறந்து சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரியில் கல்விகற்ற தோழர் நடேசலிங்கம் EPRLF இன் அரசியல் வேலைத்திட்டங்களை ஆரம்பகாலத்தில் வன்னி மாவட்டத்தில் முன்னெடுத்ததில் முக்கிய பங்காற்றியவர். 28 -11-1981 அன்று சகோதர அமைப்பான PLOTE இயக்கத்தினர் கிளிநொச்சியில் வங்கிக்கொள்ளையில் ஈடுபட்டுவிட்டு வவுனியாவை நோக்கி பயணித்த வேளையில் புதைகுழியில் சிக்கி வாகனம் தொடர்ந்து பயணம் செய்யமுடியாத நிலையில் அவர்களுக்கு உதவி செய்து வாகனத்தை வழியனுப்பிவிட்டு திரும்பும் வழியில் இலங்கை இராணுவத்தினரது சுற்றி வளைப்பில் கொல்லப்பட்டார். 28.11.1981இல் இதே சுற்றி வளைப்பில் கொல்லப்பட்ட மற்றவர் தோழர் கனகலிங்கம் ஆகும் இவரும் ஆரம்பகாலப் போராளிகளில் ஒருவர்.ஈழ மாணவர்.பொதுமன்றம்(Gues) என்னும் மாணவர் அமைப்பினூடாகதனது அரசியல் பணியை ஆரம்பத்தவர்.அவர்கள் இருவருக்கும் எமது புரட்சிகர அஞ்சலிகள்.