தோழர் சுகு ஸ்ரீதரனின் “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக” என்ற நூல்

தோழர் சுகு ஸ்ரீதரனின் “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக” என்ற நூல் நாளை 06.05.2017 மாலை 04.00 மணிக்கு யாழ்ப்பாணம், பிரதான வீதியில் உள்ள திருமறைக்கலாமன்றத்தில் வெளியிடப்படுகிறது.
நிகழ்வில் சுகுவின் அரசியல் சிந்தனைகள், செயற்பாடுகள் பற்றியும் அவர் எழுதியிருக்கும் “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக” என்ற நூல் பற்றியும் உரையாடல்கள் நடக்கின்றன.
புதிய தலைமுறையுடன் தன்னுடைய சிந்தனைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள முற்படும் தோழர் சுகுவின் நோக்கும் அணுகுமுறையும் வரவேற்கப்பட வேண்டியது. போதனைகளாக இல்லாமல், பகிர்தலாகவே சுகு எப்போதும் தன்னுடைய கருத்துகளை முன்வைப்பவர். இதுவே இந்த நூலிலும் காணப்படுகிறது.

தமிழ்ச்சமூகத்துக்கு இன்று தேவையானது புதிய சிந்தனையும் புதிய செயற்பாடுகளுமே. அதைச் செய்யக் கூடிய புதிய தலைமுறையுமே.
தோழர் சுகுவின் இந்த முன்வைப்பு இதற்கான முதலடிகளில் ஒன்றாக இருக்கும்.
வாருங்கள், கூடிப்பேசுவோம். விவாதிப்போம். சேர்ந்து செயற்படுவோம்.
புதியதாக.

(Karunakaran)