தோழர் தம்பி தில்லை முகிலன்

தோழர் தம்பி தில்லை முகிலன் என நம் எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட தம்பிப்பிள்ளை துரைவீரசிங்கம் 31.03.2018 அன்று மரணத்தைத்தழுவிக்கொண்டார்.இன்று (01.04.2018) மாலை அவருக்கான இறுதிக் கடமைகள் நிறைவேற்றப்பட்டன.தமிழர் சமுக ஜனநாயக கட்சியின்(SDPT)தோழர்களும் கலந்து தொண்டு தமது இறுதி அஞ்சலிகளைத் செலுத்தினர்.

திருமலை மண்ணில் 60, 70 களில் கம்யூனிஸ்ட்
கட்சியின் தீவிர செயற்பாட்டாளராக இயங்கியவர்.70 களின் இறுதிப்பகுதியில் எழுச்சியுற்ற தேசிய விடுதலைப் போராட்டத்தில் முற்போக்கு முகாமைச் சார்ந்து இயங்கியவர். தோழர் பத்மநாபா தோழர் வீ.ஏ கந்தசாமி போன்றவர்களின்மீது மதிப்பும் மரியாதையும் வைத்து இனைந்து செயற்பட்டவர். இலங்கை இந்திய சமாதன ஒப்பந்தத்தைத் தொடர்ந்து திருமலையில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் வேலைத்திட்டங்களில் பங்காற்றியிருந்தார்.வடகிழக்கு மாகாண சபையின் பொதுசனத் தொடர்பு அதிகாரிகளில் ஒருவராக செயற்பட்டார்.
குறிப்பாக அக்காலகட்டத்தில் தோழர் வீ.ஏ கந்தசாமி அவர்களின் தலைமையில் வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்ட ஈழதொழில் சங்க சம்மேளனத்தை கட்டும் பணியில் தொழிலாளர்களை திருமலை மண்ணில் அணிதிரட்டினார்.அதற்கான வேலைகளுக்கு தலைமை தாங்கி செயற்பட்டார்.இதனால் புலிகளின் கொலைப்பயமுறுத்தல்ளிலிருந்து தப்புவதற்காக குடும்பத்துடன் இடப்பெயர்வு , முகாம் வாழ்க்கை என்று பலவித இன்னல்களை சந்தித்தவர். பின்பு தாயகம் திரும்பி அரசியல் செயற்பாடுகில் பங்கெடுத்துக்கொண்டவர்.இறுதியாக 2016ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற காங்கிரஸில் பங்கெடுத்து தனது கருத்துக்களை ஆக்க பூர்வமாக முன்வைத்து தமிழர் சமுக ஜனநாயக கட்சியாக(SDPT) உருவெடுக்க பங்களிப்பை நல்கியவர். அரசியல் செயற்பாடுகளுக்கப்பால் கலை இலக்கிய செயற்பாடுகளிலும் மக்கள் மத்தியில் தனது ஆழுமையைச் செலுத்தியவர். அதற்கு திருமைலை மண்னே சான்று பகிரும். அவருடைய மரணம் சம்பவித்த விதம் எம்கு அதிற்சியை மிகவும் தருகின்றது.
தமிழர் சமுக ஜனநாயக கட்சி(SDPT) தனது
புரட்சிகர அஞ்சலிகளை தெரிவிக்கின்றது.