நம்பிக்கைகளுடன் புதிய வருடத்தை வரவேற்போம்!

(சாகரன்)

மதம், இனம், மொழி, தேசங்களைக் கடந்து உள்ளத்தால் இணையும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மனிதனுக்கு இருக்கும் சிறப்பியல்பான கடந்தகால நினைவுகளை மீட்டுப்பார்பதும், எதிர்காலம் பற்றி நம்பிக்கையும் தொடர்ந்தும் நடைபெறட்டும். நம்பிக்கையும், திட்டமிடலும், சகேதரத்துவமும், மனித நேயமும், சமூக நலன்சார்ச்த செயற்பாடும் எம்மை சமூகத்தில் நல்ல மனிதர்களாக தொடர்ந்தும் நிலைநிறுத்தும் . எமது வாழ்க்கை அனுபவங்களை பாடமாக எடுத்துக்கொண்டு இதனை மேலும் செழுமைப்படுத்தி செயற்பட முற்படுவோம் இதுவே எம்மை முன்னேற்றகரமா பாதையில் பயணிக்க ஆவன செய்யும். ஒரு நிறைவான வாழ்வை எமக்கு பெற்றுத் தரும்.

அமெரிக்காவின் தேர்தல் முடிவுகள், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிதானியா விலகுவது என்ற தீர்மானம், சிரிய யுத்த்தை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா எடுத்துக் கொண்ட முயற்சிகள், கியூபாவின் தலைவர், விடுதலை வேண்டி நிற்கும் பலரின் ஆதர்ஷ புருசன் பிடல் காஸ்ரோ வின் மரணம், தமிழ் நாட்டின் ஜெயலலிதாவின் மரணமும் இதனைத் தொடர்ந்த புதிய தெரிவுகளும், இலங்கையில் வருட இறுதிக்குள் அரசியல் அமைப்பில் மாற்றம் இதற்கூடாக இலங்கைச் சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு என்ற நிறைவேற்றப்படாத நிகழ்வுகளும் உலக ஒழுங்கில் சிறப்பான எனது கவனத்தை திருப்பிய 2016 வருடத்து நிகழ்வுத் தருணங்கள்.

தனிப்பட்ட முறையில் நம்பிக்கைகளுடன் நான் நம்பும் இடதுசாரி செயற்பாடுகள் முன்னோக்கியே செல்லுகின்றன என்ற திருப்தியும் எனக்குள் எற்பட்டிருக்கின்றது. எனக்கான தோழமை வட்டம் ஆரோக்கியமான உறவுகளைப் என்னுடன் பேணுகின்றனர் என்ற சுயவிமர்சனப் பார்வையும் இருக்கின்றது. எழுத்து துறையில் இன்னமும் திட்டமிட்டு அதிகம் ஈடுபடவேண்டும் என்ற எண்ணச் சூழலை எனக்குள் ஏற்படுத்தியிருக்கின்றது. ஆண்டு ஒன்று கடந்து வயது கூடுகின்றது என்ற சலனங்கள் ஏதும் அற்ற அர்த்தம் உள்ள கொள்கைப் பிடிப்பான வாழ்கை நடைமுறை எனக்குள் நம்பிக்கைகளையும், புதிய புதிய உற்சாகங்களையும் தந்து கொண்டுதான் இருக்கின்றது. தோழர்களே! நண்பர்களே!! உறவுகளே!!! நம்பிக்கையுடன் புதிய வருடத்தை எதிர்கொள்வோம் எல்லோருக்கும் எனது புது வருட வாழ்த்துக்கள் மீண்டும்…! மீண்டும்….!!