நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும்…..

நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் வடக்கு கிழக்கில் பணியாற்றும் தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் சிலவற்றின் கூட்டறிக்கை

06 மார்ச் 2018

இவ்வாரம் கண்டியிலும் சென்ற வாரம் அம்பாறையிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். கண்டியிலும் அம்பாறையில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ள பூர்வாங்க அறிக்கைகள் நடவடிக்கை எடுக்காத தவறால் பொலிஸாரும் இந்த வன்முறையில் கூட்டுப் பொறுப்பாளிகள் என்பதை உணர்த்தி நிற்கின்றன. வடக்கு கிழக்கில் பணியாற்றும் தமிழ் சிவில் சமூக அமைப்புக்களான நாம் முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக அதிகரித்து வரும் இவ்வன்முறை தொடர்பில் பெரும் கவலை கொள்கிறோம். இந்த அரசாங்கம் முந்தைய ஆட்சியில் அளுத்கமவில் நடந்தேறிய முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறைகளைப் போன்ற சம்பவங்கள் இனி மேல் இடம்பெறா என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்தன. ஆட்சிக்கு வந்து அளுத்கமவில் நடைபெற்ற சம்பவங்களை விசாரித்து சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் இந்த அரசாங்கம் நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் இதனைச் செய்ய தவறியிருக்கிறது. அதனாலேயே இன்று கண்டியிலும்ää அம்பாறையிலும் அதற்கு முன்னர் காலியிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அரங்கேறி இருக்கின்றன. வன்முறைகள் பரவாதவாறும் வன்முறைக்கு காரணமானவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துவதும் அரசாங்கம் எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் ஆகும்.

சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களுக்கு மத்தியில் அதிகரித்து வரும் முஸ்லீம் மக்கள் தொடர்பிலான அச்ச / வெறுப்பு மனப்பான்மை தொடர்பிலும் நாம் பெரிதும் அச்சம் கொள்கிறோம். அத்தகைய அச்சமானது இவ்வன்முறைக்கு தேவையான சு10ழமைவை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. இத்தகைய மனப்பாங்குகளுக்கு எதிராக நாம் கருமமாற்ற வேண்டும். முஸ்லீம் சமூகத்திற்கு இவ் இக்கட்டான வேளையில் எமது சகோதரத்துவத்தை தெரிவித்துக் கொள்வதோடு சமூகங்களுக்கிடையிலான அச்ச உணர்வுகளைக் களைவதற்கு சேர்ந்து பணியாற்ற எமது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வன்முறைகளுக்கு காரணமான தொடந்தேச்சியான பொறுப்புக்கூறாத்தனத்திற்கு எதிராக செயலாற்ற உறுதி பூணுகிறோம்.

————————————————————————————————+

Statement by Tamil Civil Society condemning violence against Muslim community

March 6, 2018

We strongly condemn the violence being unleashed against the Muslim people in Kandy this week and in Ampara earlier last week. Initial reports from Ampara and Kandy make clear that the police by inaction were complicit in the violence. We, as Tamil civil society organizations who work in the North-East, are very disappointed with the growing violence against the Muslim community. This Government came into office promising that incidents like the one that took place in Aluthgama under the former regime, will not be repeated. The Government should have investigated the crimes against the Muslim people in Aluthgama. If the incidents had been investigated and those responsible had been brought to book we could have prevented what happened in Kandy, Ampara and before that in Galle. Impunity breeds violence and this has been a recurrent theme throughout Sri Lanka’s history. The Government must do all that is necessary to stop the violence from spreading and investigate the reasons for the violence in Kandy and Ampara and hold those responsible to account for their heinous acts.

We are also troubled by the growing Islamophobia within both the Sinhalese and Tamil communities which provide the atmosphere for the violence that we are witnessing. We must actively work against the spreading Islamaphobia and take remedial action. We stand in solidarity with the Muslim community against these attacks and pledge to work together to resolve matters of inter -ethnic tensions and ending the cycle of impunity that enables this violence.

Signatories:

Tamil Civil Society Forum
Adayaalam Centre for Policy Research
Centre for the Promotion and Protection of Human Rights (Trincomalee)
Jaffna University Teachers Association
Jaffna University Employees Union
Justice and Peace Commission, Diocese of Jaffna
SUYAM – Centre for Women’s Empowerment
SUYAMPU – Theatre Active Movement

Via – Tamil Civil Society Forum