நிகழ்ந்திருக்கவே கூடாத பயங்கரம்

(மொஹமட் பாதுஷா)
இலங்கையின் பல பாகங்களிலும், இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் அதிர்ச்சிகளில் இருந்து, நாடும் நாட்டு மக்களும் இன்னும் முழுமையாக மீளவில்லை. கிறிஸ்தவர்கள், கத்தோலிக்கர்களின் புனித நாளான உயிர்த்த ஞாயிறு தினத்தில், தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களை இலக்குவைத்து, மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டமிட்ட குண்டுத்தாக்குதல்கள், வரலாற்றில் மிக மோசமான இழப்பையும் துயரஅனுபவத்தையும் தந்திருக்கின்றது.